பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 683 

1192 வளம்பைம்பொனும் வாளொளி நீண்மணியு
மொளிர்கின்றன வோசனை நீணிலமுந்
தளர்வொன்றிலர் தாபதர் தாம்விழையுங்
குளிர்கொண்டதொர் சித்திர கூடமதே

   (இ - ள்.) வளர் பைம்பொனும் வாள்ஒளி நீள் மணியும் - மிகுகின்ற புதிய பொன்னும் பேரொளியுறு பெருமணிகளும்; ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும் - இவற்றின் ஒளி பரவிய ஓர் யோசனை அளவான பெரும் பரப்புறு நிலமும்; தாபதர் தளர்வு ஒன்றிலர் தாம் விழையும் - தாபதர்கள் தளர்ச்சி யிலராய் விழைவு கொள்கின்ற; ஓர் குளிர் கொண்டது - ஒரே வகையான குளிர்ச்சியுடையது; அது சித்திரகூடம் - அம்மலை சித்திரகூட மெனப்படும்.

   (வி - ம்.) வாள் ஒளி : ஒருபொருட் பன்மொழி. நிலமும் ; உம் : முற்றும்மை. 'தாம் வளையும்' என்பதூஉம் பாடம் சித்திர கூடத்திற்கும் யாற்றிற்கும் இடையே பலவகை யினிய கனிகள் கிடைப்பதாலும் அந்நிலம் ஓரோசனை அளவும் தண்மை நிலவுவதாலும் தாபதர் தளர்விலராய் இருப்பர்.

( 27 )
1193 முழவின்னிசை மூரி முழங்கருவி
கழையின்றிறுணி சந்தோடு கல்லெனவீர்த்
திழியும்வயி ரத்தொடி னம்மணிகொண்
டழியும்புன லஞ்சன மாநதியே

   (இ - ள்.) முழவு இன் இசை முழங்கு மூரி அருவி - முழவென இனிய இசையுடன் முழங்கும் பேரருவியானது; கழையின் துணி சந்தோடு ஈர்த்து வயிரத்தொடு இனம் மணி கொண்டு - மூங்கிலின் துண்டுகளையும் சந்தனக் கட்டைகளையும் இழுத்துக் கொண்டு, வயிரத்தையும் பல இன மணிகளையும் கொண்டு; கல்லென இழியும் புனல் - கல்லெனும் ஒலியுடன் வீழும் நீரினால்; அஞ்சன மாநதி அழியும் - அஞ்சனமாநதி யெனும் ஆறு மிகப் பெருகும்.

   (வி - ம்.) மூரி - பெருமை. கழையின் துணி - முங்கிற்றுண்டு. சந்து - சந்தனமரம். கல்லென : ஒலிக்குறிப்பு. அழியும் - பெருகும்.

( 28 )
1194 இதுபள்ளி யிடம்பனி மால்வரைதா
னதுதௌ்ளறல் யாறுவை தேமரமாக்
கதிதள்ளி யிராது கடைப்பிடிநீ
மதிதள்ளி யிடும்வழை சூழ்பொழிலே

   (இ - ள்.) இது பள்ளி - இது அத்தாபதர் வாழும் பள்ளி; இடம் பனி மால்வரை - இப் பள்ளியின் இடப்பக்கம் அந்தக்