| பதுமையார் இலம்பகம் | 
684  | 
  | 
| 
 குளிர்ந்த பெரிய சித்திர கூடமலை; அது தௌ் அறல் யாறு - வலப்பக்கம் உள்ள அது தெளிந்த நீரையுடைய யாறு (அஞ்சன மாநதி); உவை தேமர மா - முன்னும் பின்னும் உள்ளவை இனிய மாமரமும்; வழை சூழ் பொழில் - சுரபுன்னை சூழும் பொழிலுமாகும்; மதி தள்ளியிடும் - இவை அறிவை (இன்பத்தினாலே) நீக்கிவிடும்; நீ கதி தள்ளி இராது கடைப்பிடி - நீ செலவைத் தவிர்ந்திராமல் செயலைக் கடைப்பிடித்துச் செல். 
 | 
| 
    (வி - ம்.) இது பள்ளியென ஓரிடத்தைக் காட்டிக்கூறி, அது முதலாக மற்றவற்றைச் சுட்டிக் காட்டினான். உவை யென்றான் ஒழிந்த இரு பக்கத்தையும். பள்ளி : தாபதர் உறையுமிடம். 
 | 
( 29 ) | 
வேறு
 | 
|  1195 | 
வருந்து நீர்மையம் மாதவர் பள்ளியுட் |  
|   | 
குருந்த மேறிய கூரரும் பார்முல்லை |  
|   | 
பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார் |  
|   | 
மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வருந்தும் நீர்மை அம் மாதவர் பள்ளியுள் - தவத்தால் வருந்தும் இயல்புடைய அத்தாபதர் வாழும் பள்ளியிலே; குருந்தம் ஏறிய கூர் அரும்பு ஆர் முல்லை - குருந்த மரத்தில் ஏறிய கூரிய அரும்புகள் நிறைந்த முல்லைக்கொடி; பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார் - தம் மனம் விரும்பிய கணவரைத் தழுவிய திருவனையாரின்; மருங்கு போன்று அணி - வடிவம் போல ஒப்பித்த; மாக் கவின் கொண்டது - பேரழகினைக் கொண்டது. 
 | 
| 
    (வி - ம்.) அம் முல்லைவனம் மகளிர் வடிவை நினைப்பூட்டித் தாபதர் பள்ளியினின்றும் போகவிடும் என்பது குறிப்பு. 
 | 
( 30 ) | 
|  1196 | 
குரவ நீடிய கொன்றையங் கானின்வாய் |  
|   | 
வரகு வாளிற் றொலைச்சுநர் பாடலி |  
|   | 
னரவ வண்டொடு தேனினம் யாழ்செயும் |  
|   | 
பரவை மாநிலம் பன்னிரு காதமே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய் - குரவ மரங்கள் நிறைந்த அழகிய கொன்றைக் காட்டினிடத்தே; வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின் - வரகை அரிவாளால் அறுப்பவர் பாடுதலின்; (அம் மிடற்றுப் பாடலுக் கேற்ப) அரவவண்டொடு தேனினம் யாழ் செயும் - ஒலிக்கும் வண்டும் தேனும் யாழிசைக்கின்ற; பரவை மாநிலம் பன்னிரு காதம் - பரப்பு மிகுந்த வரகு விளைநிலம் பன்னிரு காத வழியுடையது. 
 |