நாமகள் இலம்பகம் |
69 |
|
தம் அகலம் பூசி - நன்கு இயற்றிய சந்தனம் ஒருவர் மார்பிற் பூசியது எழுவர் மார்பிலே பூசுமாறு; இறால் மூசு தேனின் மூச - தேன்கூட்டில் மொய்க்கும் வண்டுகளைப்போல நெருங்க; மொய்திரை இயம்பி யாங்கும்-(ஆங்குப் பிறந்த ஓசையும்) நெருங்கிய கடலலைபோலவும் ஒலித்து; ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்தல் ஆகா - ஒலியென்று உணர்தலன்றி எழுத்தின் உருவம் உணர இயலாமல்; வண்கடை மலிந்தது - வளமிகுங் கடைத்தெரு மலிவுற்றது.
|
|
(வி - ம்.) யாங்கும் : உம் : சிறப்பு. 'ஓரோசையும்' பாடம். பூசி - பூச.
|
|
நான்கு சாதியும் அநுலோமப் பிரதிலோமரும் சங்கர சாதியும்பற்றி 'எழுவர்' என்றார் என்பர் நச்சினார்க்கினியர். எழுவர் என்றது பன்மை பற்றி வந்ததென்பதே தக்கது.
|
( 87 ) |
117 |
மெய்யணி பசும்பொற் சுண்ண மேதகு நான நீரி |
|
னைதுபட் டொழுகி மானை யழிமதங் கலந்து சேறாய்ச் |
|
செய்யணி கலன்கள் சிந்தி மாலையு மதுவு மல்கி |
|
வெய்தடி யிடுதற் காகா வீதிகள் விளம்ப லுற்றேன். |
|
(இ - ள்.) மெய்அணி பசும்பொன் சுண்ணம் - மெய்யில் அணிந்து மிகுந்த புதிய நல்ல சுண்ணப்பொடி ; மேதகு நானம் நீரின் ஐதுபட்டு ஒழுகி - உயர்ந்த புழுகாலும் பனிநீராலும் இனகுதலுற்றுத் தெருவில் ஒழுகுவதால்; யானை அழிமதம் கலந்து - (அதனுடன்) யானையின் மிகுமத நீருங் கலந்து; மாலையும் மதுவும் மல்கி - மாலையும் தேனும் நிறைந்து; சேறாய் - சேறாகி; செய் அணிகலன்கள் சிந்தி - அருமையாகச் செய்த அணிகலன்களும் சிந்தி; வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் - விரைய அடியிடுதற்கு முடியாத தெருக்களைப்பற்றி; விளம்பலுற்றேன் - கூறத் தொடங்குகின்றேன்.
|
|
(வி - ம்.) அணி சுண்ணம் : 'உண்ட (பின் மிகுந்த) சோறு'போல் நின்றது; மிச்சில் கவிழ்த்தல் மரபு. மாலையினும் கலத்தினும் தீண்டுதற்கு அடி நாணிற்று, தமது நலத்தான்.
|
|
இவை பீடிகைத் தெருவொழிந்தன.
|
( 88 ) |
வேறு
|
|
118 |
முழவணி முதுநகர் முரசொடு வளைவிம |
|
விழவணி மகளிர்தம் விரைகமழ் இளமுலை |
|
யிழையணி யொளியிள வெயில்செய விடுபுகை |
|
மழையென மறையின பொலிவின தொருபால். |
|