பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 690 

மலரும் குருக்கத்தி மலரும் அணிந்து; இனமலர் பொழிந்து - மற்றைய இனமலர்கள் தேனைப் பொழிந்து; கற்புடை மாதரார் மனம் எனக் கிடந்த செந்நெறி - கற்புடைய மகளிர் மனம் போலக் கிடந்த செவ்விய நெறி; தாதின்மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்ப - (நிலத்தின் அன்றி) மகரந்தப் பொடியின் மேல் நடந்ததாகிய ஒரு தன்மையுடையது என்பர்.

   (வி - ம்.) கோதை - மலர்மாலை. கத்திகைப்போது - குருக்கத்திமலர். கற்புடை மாதரார்மனம் நெறிக்குத் தூய்மைக்குவமை என்க. செந்நெறி - செவ்விய வழி. தாது - பூந்துகள்.

( 43 )
1209 மணியியற் பாலிகை யனைய மாச்சுனை
யணிமணி நீண்மல ரணிந்த தாயிடை
யிணைமலர்ப் படலிகை போலு மீர்ம்பொழில்
கணையுமிழ் சிலையினாய் கண்டு சேறியே.

   (இ - ள்.) மணி இயல் பாலிகை அனைய மாச்சுனை - மணிகளிழைத்த பாலிகை போன்ற பெரிய சுனையின்; அணிமணி நீள்மலர் அணிந்தது ஆயிடை - அழகிய மணிபோலும் நீண்ட மலர்களாலே அணியப்பட்டதாகிய அவ் வழியையும்; இணைமலர்ப் படலிகை போலும் ஈர்ம்பொழில் - ஒத்த மலர்களையுடைய பூந்தட்டுப் போலும் குளிர்ந்த பொழிலையும்; கணை உமிழ் சிலையினாய்! - அம்பை உமிழும் வில்லுடையாய்!; கண்டு சேறியே - பார்த்துச் செல்வாயாக!

   (வி - ம்.) இடை - வழி. 'கண்டு சேறி' என்றான் ஓன்றையும் நுகரலாகாது என்பதற்கு.

   பாலிகை - வட்டவடிவிற்றாகியதொரு தட்டு. மா - பெருமை. அணி மணி - அழகிய மணி. படலிகை - மலரிட்டு வைக்கும் பெட்டி. ஈர்ம்பொழில் - குளிர்ந்த சோலை.

( 44 )
1210 இலைப்பொலி பூண்முலை யெரிபொன் மேகலைக்
குலத்தலை மகளிர்தங் கற்பிற் றிண்ணிய
வலைத்துவீ ழருவிக ளார்க்குஞ் சோலைசூழ்
வலத்தது வனகிரி மதியிற் றோன்றுமே.

   (இ - ள்.) இலைப்பொலி பூண்முலை எரி பொன் மேகலை - இலை வடிவமான அணிகளால் விளக்கமுறும் முலையினையும், ஒளிரும் பொன் மேகலையையும் உடைய; குலத்தலை மகளிர்தம் கற்பின் திண்ணிய - நற்குலப் பெண்டிரின் கற்பைப்போலத் திண்மையுடைய; அலைத்துவீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ் வனகிரி - பொன் மணி முதலியவற்றை அலைத்து வீழும் அருவிகள் ஒலிக்கும், சோலைகள் சூழ்ந்த வனகிரி; வலத்தது -