| பதுமையார் இலம்பகம் |
691 |
|
|
வலப்பக்கத்தே உள்ளது; மதியின் தோன்றும் - (அருவியாலும் குளிர்ச்சியாலும்) திங்களைப்போலத் தோன்றும்.
|
|
(வி - ம்.) திண்ணிய வனகிரி, அருவிகள் ஆர்க்கும் வனகிரி, சோலைசூழ் வனகிரி எனத் தனித்தனியே கூட்டுக.
|
( 45 ) |
| 1211 |
கரியவன் றிருமுடி கவிழ்த்த சேவடிப் |
| |
பெரியவன் றிருமொழி பிறழ்த லின்றியே |
| |
மரியவ ருறைதலின் மதன கீதமே |
| |
திரிதரப் பிறந்ததோர் சிலம்பிற் றென்பவே. |
|
|
(இ - ள்.) கரியவன் திருமுடி கவிழ்த்த சேவடிப் பெரியவன் - இந்திரன் தன் திருமுடியைச் சாய்த்து வணங்கிய சிவந்த அடிகளையுடைய அருகப் பெருமான்; திருமொழி பிறழ்தல் இன்றியே - கூறிய அருகாகமத்திற் கூறியவை தவறுதல் இல்லாமலே; மரியவர் உறைதலின் - அதிலே பொருந்திய முனிவர்கள் வாழ்தலாலே; மதனகீதமே திரிதர - காமனது பாட்டொன்றுமே அவ்விடத்தில் இல்லாமல்; பிறந்தது ஓர் சிலம்பிற்று என்ப - பிற ஓசைகள் யாவும் உண்டாகிய ஒப்பற்ற பக்கமலையினை உடையது அவ்வனகிரி என்பர்.
|
|
(வி - ம்.) சிலம்பு - பக்கமலை.
|
|
வானோர் இறைவனும் வணங்கும் சேவடியையுடைய பெரியவன்; அவன், அருகன் என்க. திருமொழி - ஆகமம். மரியவர் என்பது மருவியர் என்பதன் விகாரம், மதனகீதம் - காமத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் இசைகள். திரிதருதல் - பிறழ்தல். ஈண்டு நீங்க என்னும் பொருட்டாய் நின்றது. சிலம்பிற்று - ஓசையையுடையது.
|
( 46 ) |
| 1212 |
ஏற்றரு மணிவரை யிறந்து போனபின் |
| |
மாற்றரு மணநெறி மகளிர் நெஞ்சமே |
| |
போற்பல கவர்களும் பட்ட தாயிடை |
| |
யாற்றல்சால் செந்நெறி யறியக் கூறுவாம். |
|
|
(இ - ள்.) ஏற்று அரு மணிவரை இறந்து போனபின் - ஏறுமிடம் அரிய அம் மலையைக் கடந்து சென்ற பிறகு; மால்தரும் மணநெறி மகளிர் நெஞ்சமேபோல் - மயக்கந்தரும் கல்வி நெறியுடைய பரத்தையரின் உள்ளமேபோல; பல கவர்களும் பட்டது - வழியானது பல கிளைகளையும் உடையது (ஆதலின்); ஆயிடை ஆற்றல்சால் செந்நெறி அறியக் கூறுவாம் - அவ்வழியிடத்துச் செல்லுதல் அமைந்த செவ்விய வழியை அறியுமாறு கூறுவோம்.
|
|
(வி - ம்.) 'மாற்ற அரு நெஞ்சம்' எனக் கொண்டு, 'வசப்படுத்தமுடியாத உள்ளம்' என்பர் நச்சினார்க்கினியர். 'கவர்ப்பு' என்பது 'கவர்' என ஆனது விகாரம்.
|
( 47 ) |