பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 693 

   (இ - ள்.) மண் அகம் காவல் மன்னன் மாதர் அம் பாவை மாசு இல் ஒண் நுதல் மகளை - (அந் நாட்டிலே) நிலவுலகின் காவலானாகிய வேந்தன், காதலை யூட்டும், அழகிய பாவை போன்ற, குற்றம் அற்ற, ஒள்ளிய நெற்றியளாகிய தன் மகளை; தந்து ஈங்கு உறைக என - நினக்குக் கொடுத்து, ஈங்கே யிருப்பாயாக என்று கூறுதலால்; ஒழுகும் நாளுள் - நீயும் அங்கே உறையும்போது; வெண்மதி இழந்த மீன்போல் - வெண் திங்களை யிழந்த விண்மீக்ளைப்போல; புல் எனவு எய்தி நின்ற - பொலிவிழந்து வருத்தம் அடைந்து நின்ற; அண்ணல் நின் தோழர் எல்லாம் - அண்ணலாகிய நின் தோழர்கள் யாவரும்; அவ்வழி அடைவர் என்றான் - அவ்விடத்தே வந்து நின்னைச் சேர்வர் என்றான்.

   (வி - ம்.) மன்னன் என்றது தடமித்தனை. மாதர் - காதல். பாவை : ஆகுபெயர்; கனகமாலை. வருத்தம் எய்தி நின்ற என வருவித்தோதுக. தோழர் அண்ணல், விளி. அண்ணலும் நின்தோழரும் எனக் கொண்டு நந்தட்டனும் நின் தோழரும் என்பர் நச்சினார்க்கினியர்.

( 50 )

வேறு

1216 நெட்டிடை நெறிகளு நிகரில் கானமு
முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமு
நட்புடை யிடங்களு நாடும் பொய்கையு
முட்பட வுரைத்தன னுறுதி நோக்கினான்.

   (இ - ள்.) நெட்டிடை நெறிகளும் - நீண்ட இடத்தையுடைய வழிகளும்; நிகர் இல் கானமும் - ஒப்பற்ற காடுகளும்; முட்டு உடை முடுக்கரும் - போக்கற்ற அருவழிகளும்; மொய்கொள் குன்றமும் - நெருங்கிய குன்றுகளும்; நட்பு உடை இடங்களும் - உறவு கொள்ளும் இடங்களும்; நாடும் - நாடுகளும்; பொய்கையும் - பொய்கைகளும்; உட்பட உரைத்தனன் - பிறவும் அடங்க (முதலிற்) கூறியவனாகி; உறுதி நோக்கினான் - பின்னர் அவனுக்கு நன்மை தரும் மந்திரங்களைக் கூற நினைந்தான்.

   (வி - ம்.) முட்டுடை முடுக்கர் - நல்லதோரு வழிபோற்றோன்றி நடந்திடின் நன்றிதேறாப் புல்லர்தம் நட்புப்போலப் போய் அறத்தேய்வதாகிய வழியையுடைய சந்து. உறுதி - மந்திரம்; ஆகுபெயர்.

( 51 )
1217 செல்கதி மந்திரஞ் செவியிற் செப்பிய
மல்லலங் குமரனை வாழ நாட்டவே
வல்லவன் மந்திர மூன்றுங் கொள்கெனச்
சொல்லின னவற்றது தொழிலுந் தோன்றவே