பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 694 

   (இ - ள்.) செல்கதி மந்திரம் செவியில் செப்பிய மல்லல் அம் குமரனை - நற்கதியிற் சேரும் மந்திரத்தைத் தன் காதில் ஓதிய, ஆற்றல் உறும் அழகிய சீவகனை; வாழ நாட்டவே வல்லவன் - வாழ நிறுத்த வன்மையுடைய சுதங்சணன்; மந்திரம் மூன்றும் கொள்க என - இம் மந்திரம் மூன்றையும் குறிக்கொள்க என்று; அவற்றது தொழிலும் தோன்றச் சொல்லினன் - அவற்றின் தந்திரமும் விளங்கக் கூறினன்.

   (வி - ம்.) செல்கதி மந்திரம் செவியிற் செப்பிய மல்லங்குமரனை என்றது சீவகன் சுதஞ்சணனுக்குச் செய்த உதவியைத் தேவர் நமக்கு நினைவூட்டியபடியாம். வழிநாட்டுதலாவது - இன்புற்றமர்ந்து வாழும்படி நிலைநிறுத்துதல்.

( 52 )
1218 கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காமுறப்
படுங்குர றருமிது பாம்பு மல்லவுங்
கடுந்திற னோய்களுங் கெடுக்கும் வேண்டிய
வுடம்பிது தருமென வுணரக் கூறினான்.

   (இ - ள்.) கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காம் உறப்படும் குரல் தரும் இது - விரைந்து தொடுக்கப்படுவதும் ஆண் பெண்களில் ஒருவருக்கொருவர் கவர்ச்சியை உண்டாக்குவதும் ஆகிய அம்பினையுடைய காமனும் விரும்பும் குரலைத் தருவதும் இம்மந்திரம்; பாம்பும் அல்லவும் கடுந்திறல் நோய்ளும் கெடுக்கும் (இது) - பாம்பின் நஞ்சையும், ஒழிந்த மண்டலி முதலியவற்றின் நஞ்சினையும், காற்று நீர் நெருப்பு முதலியவற்றையும், நோய்களையும் கெடுக்கும் இம் மந்திரம்; வேண்டிய உடம்பு தரும் இது - வேண்டிய உடம்பைத் தருவது இம் மந்திரம்; என உணரக் கூறினான் - என்று விளங்க அறியுமாறு உரைத்தான்.

   (வி - ம்.) கவர்கணை - ஒருவர் நெஞ்சினை ஒருவர் கவர்தற்குக் காரணமான மலரம்பு. காமனும் எனல் வேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. இது - இம்மந்திரம். இது என்னும் சுட்டினைப் பாம்புடனேயும் ஒட்டுக. அல்லவும் - பாம்பல்லாத ஏனைய நஞ்சுடையனவும். கடுந்திறல் நோய் என்றது மனித முயற்சியாற் றடுக்கவொண்ணாத காற்று இடி முதலியவற்றால் உண்டாகும் துன்பங்களை.

( 53 )

வேறு

1219    கந்தடு களிறு கொல்லுங்
கருவரை யுழுவை யன்னான்
   மந்திர மூன்று மோதி
வானவிற் புரையும் பைந்தா