பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 695 

1219    ரிந்திரன் றன்னை நோக்கி
யியக்கியர் குழாத்தை நோக்கிச்
   சிந்தையிற் செல்வ லென்றான்
றேவனுஞ் செலவு நோ்ந்தான்.

   (இ - ள்.) கந்து அடு களிறு கொல்லும் - கட்டுத் தறியை முறிக்குங் களிற்றைக் கொல்லுகின்ற; கருவரை உழுவை அன்னான் - கரிய வரிகளையுடைய புலியைப் போன்ற சீவகன்; மந்திரம் மூன்றும் ஓதி - மந்திரம் மூன்றையும் கற்றுக்கொண்டு; வானவில் புரையும் பைந்தார் இந்திரன் தன்னை நோக்கி - வானவில்லைப் போன்ற புதிய மாலையணிந்த இந்திரன் போன்ற சுதஞ்சணனைப் பார்த்து; இயக்கியர் குழாத்தை நோக்கி - (அவன் மனைவியரான) இயக்கியரின் கூட்டத்தைப் பார்த்து; சிந்தையின் செல்வன் என்றான் - என் விருப்பப்படி ஏகுவேன் என்றான்; தேவனும் செலவு நேர்ந்தான் - சுதஞ்சணனும் அவன் போவதற்கு ஒருப்பட்டான்.

   (வி - ம்.) தூர கமனமும் கலைகளில் ஒன்றாதலின், 'சிந்தையிற் செல்வன்' என்பதனால் அக் கலைவல்லவனென்பது பெற்றாம். செல்வமிகுதியால் இந்திரன் உவமையானான்.

( 54 )
1220    மனைப்பெருங் கிழத்தி மாசின்
மலைமக டன்னை யான்சென்
   றெனைத்தொரு மதியி னாங்கொ்
லெய்துவ தென்று நெஞ்சி
  னினைத்தலுந் தோழ னக்கு
நிழலுமிழ்ந் திலங்கு செம்பொற்
  பனைத்திரண் டனைய தோளாய்
பன்னிரு மதியி னென்றான்

   (இ - ள்.) மனைப் பெருங் கிழத்தி மாசு இல் மலைமகள் தன்னை - பெருமை தங்கிய இல்லக் கிழத்தியாகிய குற்றம் அற்ற தத்தையை; எனைத்து ஒரு மதியின் யான் சென்று எய்துவது ஆம் என்று - எவ்வளவினதாகிய ஒரு திங்களிலே நான் சென்று கூடும் இயல்பு உண்டாகுமோ என்று; நெஞ்சில் நினைத்தலும் - உள்ளத்தில் எண்ணியவுடனே; தோழன் நக்கு - சுதஞ்சணன் நகைத்து; நிழில் உமிழ்ந்து இலங்கு செம்பொன் பனை திரண்டனைய தோளாய் - ஒளி வீசி விளங்கும், பொன்னணி புனைந்த, பனை திரண்டாற் போன்ற தோளனே!; பன்னிரு மதியின் என்றான் - நீ அவளைக் கூடுவது பன்னிரண்டாந் திங்களில் என்றான்.