பதுமையார் இலம்பகம் |
697 |
|
வேறு உரைப்பக் கேட்டு - தனித் தனியே தெளிவாக உரை விளம்பக் கேட்டு; கற்பக மரமும் செம்பொன் மாரியும் கடிந்த கையான் - கற்பக மரத்தையும் செம்பொன் பெய்யும் முகிலையும் மாற்றிய வண்மையுறுங் கையினனாகிய சீவகன்; சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான் - சுற்றிலும் உள்ள தோழியரைப் போகவிட்டுச் சுதஞ்சணனைத் தொழுது நின்றான்.
|
(வி - ம்.) மறைமொழி கற்பித்ததனால் ஆசானாகக்கொண்டு தொழுதான், வழிபடு தெய்வத்தைத் தொழுதான் என்றுங் கூறலாம் என்பர். நச்சினார்க்கினியர் 'மறைபொருளல்லாதவற்றை வேறாக நாடி அங்ஙனஞ் சுருங்கக் கூறிப் பின்பு மறைபொருளாகியவற்றை வேறாகக் கொண்டிருந்து கூற' என்று மொழிமாற்றிக் கூறுவர். மற்றும், 'சுதஞ்சண்ணைத் தொழுது, சுற்றிலுமுள்ள தோழியரை விடுத்துநின்றான்' என்றம் மாற்றிக் கூறுவர். அவ்வாறு பிரிப்பதாற் போதப் பயனின்றென்க.
|
( 57 ) |
வேறு
|
1223 |
சேட்டிளஞ் செங்கயல் காப்பச் செய்துவிற் |
|
பூட்டிமேல் வைத்தன புருவப் பூமக |
|
டீட்டிருந் திருநுதற் றிலக மேயென |
|
மோட்டிருங் கதிர்திரை முளைத்த தென்பவே. |
|
(இ - ள்.) சேடு இளஞ் செங்கயல் காப்பச் செய்து - பெருமையும் இளமையுமுடைய செங்கயல்களைக் காக்கச் செய்து; வில்பூட்டி மேல் வைத்த அன புருவப் பூமகள் - வில்லைப் பூட்டி மேலே வைத்தாற் போலும் புருவத்தினையுடைய நிலமகளின்; தீட்டு இருந்திருநுதல் திலகமே என - தீட்டப் பெற்ற அழகிய நெற்றியிலிட்ட திலகம்போல; மோடு இருங்கதிர் திரை முளைத்தது - பெருமையுடைய பெரிய ஞாயிறு கடலில் தோன்றியது.
|
(வி - ம்.) சேடு - பெருமை. கயல் என்றது கண்களை. பூமகள் - நிலமகள். மோட்டிருங்கதிர் - பெருமையுடைய பெரிய ஞாயிற்றுமண்டிலம். திரை - கடல் : ஆகுபெயர்.
|
( 58 ) |
வேறு
|
1224 |
அழல்பொதிந்த நீளெஃகி னலர்தார் |
|
மார்பற் கிம்மலைமேற் |
|
கழல்பொதிந்த சேவடியாற் |
|
கடக்க லாகா தெனவெண்ணிக் |
|
குழல்பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தி |
|
னீங்கிக் கொண்டேந்தி |
|
நிழல்பொதிந்த நீண்முடியா னினைப்பிற் |
|
போகி நிலத்திழிந்தான் |
|