பதுமையார் இலம்பகம் |
699 |
|
<
1226 |
வாளுழலை பாய்ந்திளைய வளநா கிட்டி னமென்னுந் |
|
தாளொழியப் போரேறு தனியே போந்த தெனவெண்ணி |
|
நீளருவிக் கண்ணீர்வீழ்த் தலறி வண்ணங் கரிந்துருகிக் |
|
கோளுழுவை யன்னாற்குக் குன்ற முந்நின் றழுதனவே. |
|
|
(இ - ள்.) இனம் என்னும் தாள் ஒழிய - தோழராகிய கால் அங்கே நிற்கவும்; வாள் உழலை பாய்ந்த - வாட்படையாகிய தடைமரத்தை நீங்கி; இளைய வளநாகு இட்டு - இளமையும் வளப்பமும் உடைய தத்தை குணமாலையென்னும் நாகுகளைப் பிரிந்து; போர் ஏறு தனியே போந்தது என எண்ணி - சீவகனாகிய போருக்குரிய ஏறு தனியே வந்தது என்று நினைந்து; நீள் அருவிக் கண்ணீர் வீழ்த்து அலறி - நீண்ட அருவியாகிய கண்ணீரை விட்டுக் கதறி; வண்ணம் கரிந்து உருகி - மேனி கருகி அசும்பு வீழ்தலின்; கோள் உழுவை அன்னாற்குக் குன்றமும் நின்று அழுதன - கொல்லும் புலியன்னானுக்கு மலைகளும் நின்றழுதன.
|
(வி - ம்.) ஆசிரியர் தம் குறிப்பை மலைமீதேற்றினார். தோழர் நால்வரும் இவனுக்குக் கால்போறலின் தாள்' என்றார். புலிக்குத் தன் காடும் பிறகாடும் ஒக்கும் என்று 'உழுவை யன்னான்' என்றார்.
|
( 61 ) |
1227 |
மிக்கார்தங் கேட்டின்கண் மேன்மை |
|
யில்லாச் சிறியார்போ |
|
னக்காங்கே யெயிறுடைந்த நறவ |
|
முல்லை நாள்வேங்கை |
|
தக்கார்போற் கைம்மறித்த காந்த |
|
ளந்தோ தகாதெனவே |
|
தொக்கார்போற் பன்மாவு மயிலுந் |
|
தோன்றித் துளங்கினவே |
|
(இ - ள்.) மிக்கார்தம் கேட்டின்கண் மேன்மையில்லாச் சிறியார்போல் - பெரியோருக்குக் கெடுதி நேர்ந்தபோது உயர்வு கருதாத கீழ்மக்கள் நகுதல் போல; நறவம் முல்லை நாள் வேங்கை நக்கு ஆங்கே எயிறு உடைந்த - தேனுடைய முல்லைகள் அக்காலத்துக்குரிய வேங்கை மரத்தின்கண்ணே நின்று நகைத்து அப்பொழுதே எயிற்றின் தன்மை கெட்டன; தக்கார்போல் காந்தள் 'அந்தோ! தகாது' எனவே கை மறித்த - அது கண்டு நன் மக்களைப் போலக் காந்தள், 'அந்தோ! இது தகாது' என்று கைகவித்து விலக்கின; தொக்கார்போல் பல் மாவும் மயிலும் தோன்றித் துளங்கின - (அவ்வளவிலே) சுற்றத்தாரைப் போலே பலவகை விலங்குகளும் மயில்களும் கண்டு நடுங்கின.
|