நாமகள் இலம்பகம் |
70 |
|
(இ - ள்.) முழவு அணி முதுநகர் முரசொடு வளைவிம - முழவொலி மிகுத்த கோயில்களில் முரசும் சங்கும் ஒலிப்பதால்; விழவு அணி மகளிர்தம் விரைகமழ் இளமுலை - அவ் விழவிற்கு அணிந்துகொண்ட மகளிரின் மணங்கமழும் இளமுலையில்; அணி இழை ஒளிஇள வெயில்செய - அணிந்த பூண்களின் ஒளி இளவெயிலை உண்டாக்கும்படி; இடுபுகை மழைஎன மறையின பொலிவினது ஒருபால் - (கோயில்களில்) இடுகின்ற புகை முகிலென ஞாயிற்றை மறைத்த பொலிவினையுடையது ஒரு பக்கம்.
|
|
(வி - ம்.) கதிரவன் ஒளியிருப்பின் இழைஒளி தோன்றாது.
|
|
விம - விம்ம ; ஒலிப்ப. இச் செய்யுளின்கண் முகில் மின்னலோடு இடியும் உடையதாய் வந்து ஞாயிற்றை மறைப்பதுபோல புகை முழவு முதலியவற்றின் ஒலியோடு அணிகலன் மின்ன ஞாயிற்றை மறைத்த தென்றமை யுணர்க.
|
( 89 ) |
119 |
குடையொடு குடைபல களிறொடு நெரிதர |
|
வுடைகட லொலியினொ டுறுவரர் பலிசெல |
|
முடியொடு முடியுற மிடைதலின் விடுசுடர் |
|
கொடியுடை மழைமினிற் குலவிய தொருபால். |
|
(இ - ள்.) பல குடையொடு குடை களிறொடு (களிறு) நெரிதர - பல குடையுங் குடையும் களிறுங் களிறும் நெருங்கி; உடைகடல் ஒலியினொடு உறுவரர் பலிசெல - உடைகடல் ஒலி போலும் ஒலியினுடன் தேவர்களின் பூசனை நடத்தலால்; முடியொடு முடியுற மிடைதலின் விடுசுடர் - (அதனைச் சேவிக்கும் அரசரின்) முடியும் முடியும் நெருங்குதலால் எழும் ஒளி; மழை கொடியுடை மினின் குலவியது ஒருபால் - முகிலிடை யெழும் கொடிபோன்ற மின்போற் குலவியது ஒரு பக்கம்.
|
|
(வி - ம்.) இது செல்வமுண்டாதற்குப் பலி நடக்கும் என்றார். இனிப், பலி நடத்தலிற் குடை முதலியன நெரிதர முடிநெருங்கிற் றென்றுமாம்.
|
( 90 ) |
120 |
பூத்தலை வாரணப் போர்த்தொழி லிளையவர் |
|
நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயில்தரக் |
|
காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ் |
|
பூத்துகள் கழுமிய பொலிவின தொருபால். |
|
(இ - ள்.) பூத்தலை வாரணம் போர்த்தொழில் இளையவர் - தோன்றிப் பூவனைய சூட்டையுடைய கோழிப்போரின் வெற்றியைத் தமதாகவுடைய இளைஞர்கள்; நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயில்தர - நாவினை மடித்து ஒலிக்கும் சீீழ்க்கைக் கூத்தொடு நெருங்குதலால்; காய்த்துறு தமனியத் துகளொடு - (அப்
|
|