பதுமையார் இலம்பகம் |
700 |
|
(வி - ம்.) மிக்கார் -அறிவு மிக்க சான்றோர். சிறியார் போன்று நகைத்து அப்பொழுதே அத்தீவினையின் பயனாகப் பல்லுடைபட்டன என்றும் ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. தக்கார் - தகவுடையோர். தொக்கார் - சுற்றத்தினர்.
|
( 62 ) |
1228 |
கொல்லை யகடணைந்து குறும்பு சோ்ந்து தமியாரை |
|
முல்லை முறுவலித்து நகுதிர் போலு மினிநும்மைப் |
|
பல்லை யுகுத்திடுவ மென்று பைம்போ தலர்சிந்தித் |
|
தொல்லை நிறங்கருகித் தும்பி பாய்ந்து துகைத்தனவே. |
|
(இ - ள்.) முல்லை! கொல்லை அகடு அடைந்து - முல்லைகளே! நீங்கள் கொல்லையின் நடுவைச் சேர்ந்து; குறும்பு சேர்ந்து - வேங்கையாகிய அரணை அடைந்து; தமியாரை முறுவலித்து நகுதிர்போலும் - தனித்தவர்களை முறுவல் செய்து இகழுதிர் போலும்!; இனி நும்மைப் பல்லை உகுத்திடுவம் என்று - இங்ஙனம் இகழும் நும்மை இனிமேற் பல்லை உடைத்திடுவோம் என்றுரைத்து; பைம் போது அலர் சிந்தி - புதிய போதினும் அலரினும் உள்ள தேனைத் துளித்து; தொல்லை நிறம் கருகிப் பாய்ந்து - பழைமையான தம் நிறம் கருகி அம்முல்லை மலர்களிலே பாய்ந்து; தும்பி துகைத்தன - வண்டுகள் சிதைத்தன.
|
(வி - ம்.) போது : அலரும் முகை. இம் மூன்று செய்யுட்களினும் இயற்கை நிகழ்ச்சிகளைச் சீவகன் நிலையுடன் குறித்துக் கூறினார் தற்குறிப்பேற்றங் கருதி. 'தும்பி ஆர்ந்து' என்றும் பாடம்.
|
( 63 ) |
1229 |
தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்தறொடே லெம்மில் |
|
பீடேந் தரிவையரிற் பெயர்கென் றூடு மடவார்போற் |
|
கோடேந்து குஞ்சரங்க டெருட்டக் கூடா பிடிநிற்குங் |
|
காடேந்து பூஞ்சாரல் கடந்தான் காலிற் கழலானே. |
|
(இ - ள்.) தோடு ஏந்து பூங்கோதை வேண்டேம் - இதழ் கொண்ட இம் மலர்க் கோதைகளை யாம் விரும்பிலேம்; கூந்தல் தொடேல் - (ஆதலின்) எங் கூந்தலைத் தொடாதே; எம் இல் - (நீ வழி தவறினை) இது எம் இல்லம்; பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க - சிறப்புற்ற பரத்தையர் இல்லத்தை அடைக; என்று ஊடும் மடவார்போல் - என்றுரைத்துப் பிணங்கும் மங்கையரைப் போல; கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்ட - கொம்புகளையுடைய களிறுகள் தெளிவிக்கவும்; பிடிகூடா நிற்கும் - பிடிகள் தெளியாமற் பிணங்கி நிற்கின்ற, காடு ஏந்து பூஞ் சாரல் - காடுகள் பொருந்திய அழகிய சாரலை; கழலான் காலின் கடந்தான் - கழலணிந்த சீவகன் காலாலே கடந்தான்.
|
(வி - ம்.) இதற்குமுன் காலால் நடந்தறியான் என்பது தோன்றக், 'காலிற் கடந்தான்' என்றார்.
|