பதுமையார் இலம்பகம் |
701 |
|
பூங்கோதை வேண்டேம் என்றது, கையுறைமறுத்தல் என்னும் ஓர் அகத்துறையை நினைப்பிக்கின்றது. குஞ்சரங்கள் என்னும் பொதுப்பெயர் ஈண்டுப் பெண்ணொழித்து நின்றது. கூடா : என்பது விகுதி குன்றிய எதிர்மறை வினையெச்சம் : கூடாமல் என்பது பொருள்.
|
( 64 ) |
வேறு
|
1230 |
காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பா |
|
னாழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான் |
|
வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான் |
|
மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே. |
|
(இ - ள்.) காழகம் ஊட்டப்பட்ட காரிருள் துணியும் ஒப்பான் - கருமை ஊட்டப்பட்டதோர் இருளின் துண்டமும் போன்றவன்; ஆழ் அளை உடும்பு பற்றிப் பறித்து மார்பு ஒடுங்கியுள்ளான் - ஆழமான வளையில் உள்ள உடும்பைப் பிடித்திழுத்தலால் மார்பு ஒடுங்கியவன்; வாழ் மயிர்க்கரடி ஒப்பான் - மயிர் வாழ்தலாற் கரடி போன்றவன்; வாய்க்கு இலை அறிதல் இல்லான் - வாய்க்கு வெற்றிலை கண்டறியாதவன்; மேழகக் குரலினான்- ஆட்டின் குரல்போலும் குரலினன் (ஆகிய); ஓர் வேட்டுவன் தலைப்பட்டான் - ஒரு வேடன் எதிர்ப்பட்டான்.
|
(வி - ம்.) 'வாண்மயிர்' எனவும், 'ஏழகம்' எனவும் பாடம்.
|
காழகம் - கருமை. இருட்டுணி - இருளினது துண்டு. வாய்க்கிலை : வெற்றிலை. வாய்க்கு + இலை = வாய்க்கிலை. வாய்க்குத் தகுதியுடைய இலை. எனவே வெற்றிலையை யுணர்த்தியது. மேழகம் - ஆட்டுக்கிடாய்.
|
( 65 ) |
1231 |
கொடிமுதிர் கிழங்கு தீந்தேன் |
|
கொழுந்தடி நறவொ டேந்திப் |
|
பிடிமுதிர் முலையி னாடன் |
|
றழைத்துகிற் பெண்ணி னோடுந் |
|
தொடுமரைத் தோலன் வில்லன் |
|
மரவுரி யுடையன் றோன்ற |
|
வடிநுனை வேலி னான்கண் |
|
டெம்மலை யுறைவ தென்றான். |
|
(இ - ள்.) கொடிமுதிர் கிழங்கு தீந் தேன் கொழுந்தடி நறவொடு ஏந்தி - கொடியில் முற்றிய கிழங்கும் இனிய தேனும் கொழுத்த ஊனும் கள்ளும் ஏந்தி; பிடிமுதிர் முலையினாள் தழைத் துகில் தன் பெண்ணினோடும் - பிடி போன்ற நடையினாளும் முதிர்ந்த முலையினாளும் தழையாடையுடையவளும் ஆகிய
|