| பதுமையார் இலம்பகம் | 
702  | 
  | 
| 
 தன் மனைவியுடன்; தொடு மரைத்தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற - புனைந்த மான்தோலுடனும் வில்லுடனும் மரவுரியுடனும் காணப்பட; வடிநுனை வேலினான் கண்டு எம்மலை உறைவது என்றான் - கூரிய முனையுடைய வேலனாகிய சீவகன் கண்டு, 'நீ எம்மலையில் வாழ்பவன்' என்று வினவினான். 
 | 
| 
    (வி - ம்.) கொழுந்தடி - கொழுவிய ஊன். நறவு - கள். முதிர்முலையினாள் : வினைத்தொகை. பெண், ஈண்டு மனைவி என்னும் பொருள்பட நின்றது. தோலன் - செருப்பினன், மான் தோலால் செய்த செருப்பு என்க. மரவுரியாகிய உடையினையுடையன் என்க. வேலினான் : சீவகன். 
 | 
( 66 ) | 
|  1232 | 
   மாலைவெள் ளருவி சூடி |  
|   | 
மற்றிதா தோன்று கின்ற |  
|   | 
   சோலைசூழ் வரையி னெற்றிச் |  
|   | 
சூழ்கிளி சுமக்க லாற்றா |  
|   | 
   மாலையந் தினைகள் காய்க்கும் |  
|   | 
 வண்புன மதற்குத் தென்மேன் |  
|   | 
   மூலையங் குவட்டுள் வாழுங் |  
|   | 
 குறவருட் டலைவ னென்றான் | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மாலைவெள் அருவி சூடி இதா தோன்றுகின்ற - மாலைபோல வெள்ளிய அருவியை அணிந்த இதோ காண்குறுகின்ற; சோலைசூழ் வரையின் நெற்றி - சோலை சூழ்ந்த மலையின் உச்சியிலே; சூழ்கிளி சுமக்கல் ஆற்றா மாலை அம் தினைகள் காய்க்கும் வண்புனம் - சூழ்ந்து வரும் கிளிகள் சுமக்க இயலாத, மாலை போல அழகிய தினைகள் விளைந்திருக்கும், வளமுறு புனம் ஒன்று உண்டு; அதற்குத் தென்மேல் மூலை - அப் புனத்திற்குத் தென் மேலே மூலையிலே உள்ள; அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான் - அழகிய மலையுச்சியிலே வாழும் வேடர்களுக்குத் தலைவன் யான் என்று அவ் வேடன் விளம்பினான். 
 | 
| 
    (வி - ம்.) மற்று : அசை. இதா : திசைச்சொல். 
 | 
| 
    இதா - மரூஉமுடிபுமாம். நெற்றி - உச்சி. மாலையந்தினைகள் - ஒழுங்குபட்ட தினைக்கதிர்கள் எனினுமாம். வண்புனம் - வளப்பமுடைய கொல்லை. தென்மேல் மூலை - தென்மேற்காகிய கோணம். 
 | 
( 67 ) | 
|  1233 | 
   ஊழினீ ருண்ப தென்னென் |  
|   | 
  றுரைத்தலு முவந்து நோக்கி |  
|   | 
   மோழலம் பன்றி யோடு |  
|   | 
முளவுமாக் காதி யட்ட | 
 
 
 |