பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 703 

1233    போழ்நிணப் புழுக்க றேனெய்
பொழிந்துகப் பெய்து மாந்தித்
   தோழயாம் பெரிது முண்டுந்
தொண்டிக்க ளிதனை யென்றான்

   (இ - ள்.) ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் - முறைமையால் நீர் உண்பது யாது என்று வினவினானாக; உவந்து நோக்கி - விரும்பிப் பார்த்து; தோழ! - தோழனே!; மோழல் அம் பன்றியோடு முளவுமாக் காதி அட்ட போழ் நிணப் புழுக்கல் - ஆண் பன்றியுடன் எய்ப்பன்றியையும் கொன்று சமைத்த அரிந்த ஊனாகிய புழுக்கலை; தேன் நெய் பொழிந்து உகப்பெய்து மாந்தி - தேனாகிய நெய்யை மிகவும் வார்த்துத்தின்று; தொண்டிக்கள் இதனை யாம் பெரிதும் உண்டும் என்றான் - (பின்னர்) நெல்லாற் சமைத்த கள்ளாகிய இதனையாம் மிகுதியும் பருகுவோம் என்று வேடன் விளம்பினான்.

   (வி - ம்.) ஊழ் - முறைமை. மோழலம் பன்னி - ஆண்பன்றி. முழவுமா - எய்ப்பன்றி : முள்ளம்பன்றி. காதி - கொன்று. போழ்நிணப்புழுக்கல் : வினைத்தொகை. உகப்பெய்து - மிகப்பெய்து. தொண்டிக்கள் - நெல்லாலாக்கிய கள்.

( 68 )
1234    ஊனொடு தேனுங் கள்ளு
முண்டுயிர் கொன்ற பாவத்
   தீனராய்ப் பிறந்த திங்ங
னினியிவை யொழிமி னென்னக்
   கானில்வாழ் குறவன் சொல்லுங்
தகள்ளொடூன் றேன்கை விட்டா
   லேனையெம் முடம்பு வாட்ட
லெவன்பிழைத் துங்கொ லென்றான்.

   (இ - ள்.) ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து - (முற்பிறப்பில்) ஊனையும் தேனையும் கள்ளையும் உண்டு உயிரையும் கொன்ற தீவினையால்; இங்ஙன் ஈனராய்ப் பிறந்தது - இவ்விடத்திலே இழிந்த வேடராய்ப் பிறக்க நேர்ந்தது; இனி இவை ஒழிமின் என்ன - இனி இவற்றைக் கைவிடுங்கள் என்று கூற; கானில்வாழ் குறவன் சொல்லும் - காட்டு வாழ்வுடைய வேடன் விளம்புகிறான்; கள்ளொடு ஊன் கைவிட்டால் எவன் பிழைத்தும் - கள்ளையும் ஊனையும் நீக்கினால் எவ்வாறு உயிர் வாழ்வோம்; எம் உடம்பு வாட்டல் ஏனை (வாட்டுக) என்றான் - (ஆகையால்) எம் உடம்பை வாட்டற்க; மற்றோர் உடம்பை வாட்டுக என்றான்.