| பதுமையார் இலம்பகம் | 
704  | 
  | 
| 
    (வி - ம்.) ஈனர் - இழித்தவர்; வேட்டுவர் என்றவாறு. இவை - ஊன் உண்ணல் தேன் கள் உண்ணல் உயிர் கொல்லல் ஆகிய இத்தீயவற்றை. ஏனை என்பதற்கு மற்று எனப் பொருள் கொள்க. அவ்வுடம்பு வாட்டத்தினின்று எவ்வாறு தப்புவோம் என்றும் பொருள் கொள்ளலாம். 
 | 
( 69 ) | 
|  1235 | 
ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தி லுறைத னன்றோ |  
|   | 
வூன்றினா துடம்பு வாட்டித் தேவரா யுரைத னன்றோ |  
|   | 
வூன்றியிவ் விரண்டினுள்ளு முறுதிநீ யுரைத்தி டென்ன |  
|   | 
வூன்றினா தொழிந்து புத்தே ளாவதே யுறுதி யென்றான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ? - ஊனைச் சுவை பார்த்து உடம்பைப் பெருக்கி நரகத்தில் வாழ்வது நல்லதோ?; ஊன் தினாது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ? - ஊனைத் தின்னாமல் உடம்பை வருத்தி வானவராய் வாழ்வது நல்லதோ?, ஊன்றி இவ் இரண்டினுள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன - ஆராய்ந்து இந்த இரண்டின் உள்ளும் நல்லதை நீ கூறுக என்று வினவ; ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான் - ஊனைத் தின்னாமல் நீங்கி வானவனாவதே நன்மை என்று வேடன் சொன்னான். 
 | 
| 
    (வி - ம்.) வீக்கி - பருக்கச்செய்து. தினாது - தின்னாது. ஊன்றி - கூர்ந்து பார்த்து. உறுதி - நல்லது. புத்தேள் - தேவர். 
 | 
( 70 ) | 
|  1236 | 
    உறுதிநீ யுணர்ந்து சொன்னா |  
|   | 
 யுயர்கதிச் சேறி யேடா |  
|   | 
  குறுகினா யின்ப வெள்ளங் |  
|   | 
கிழங்குணக் காட்டு ளின்றே |  
|   | 
   யிறைவனூற் காட்சி கொல்லா |  
|   | 
வொழுக்கொடூன் றுறத்தல் கண்டா |  
|   | 
   யிறுதிக்க ணின்பந் தூங்கு |  
|   | 
மிருங்கனி யிவைகொ ளென்றான். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நீ உறுதி உணர்ந்து சொன்னாய் - நீ நலம் தெரிந்து கூறினை; ஏடா, உயர்கதி சேறி - (ஆதலில்) ஏடா! நீ மேல் நிலை அடைவை: இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய் - அருகன் ஆகமத்திற் காணப்படுவன கொல்லா விரதமும் ஊனை நீக்கலும் ஆகும் காண்; காட்டுள் கிழங்கு உண இன்றே இன்ப வெள்ளம் குறுகினாய் - காட்டிலே கிழங்கினை உண்பதனால் இன்றே இன்பப் பெருக்கை அடைந்தாய்; இறுதிக்கண் இன்பம் தூங்கும் இருங்கனி இவை கொள் என்றான் - நினக்கு இறுதிக் காலத்தே இன்பம் செறியும் 
 |