பதுமையார் இலம்பகம் |
705 |
|
பெருங்கனி இவையே என்று கொள்வாய் என்று சீவகன் செப்பினான்.
|
(வி - ம்.) ஏடா : முன்னிலை ஒருமை விளி.
|
உயர்கதி - தேவகதி. சேறி - செல்வாய். தெளிவு பற்றி, இன்ப வெள்ளங் குறுகினாய் என்ற இறந்த காலத்தாற் கூறினான். காட்டுள் கிழங்குண இன்றே இன்பவெள்ளம் குறுகினாய் என மாறுக. இறைவனூல் - அருகாகமம்.
|
( 71 ) |
1237 |
உறுதி நீ உணர்ந்து சொன்னாய் உயர்கதி சேறி ஏடா |
|
குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்கு உணக் காட்டுள் இன்றே |
|
இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய் |
|
இறுதிக் கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான்
|
|
(இ - ள்.) என்றலும் - என்றுரைத்தவுடன்; தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி - தேனையும் ஊனையும் கள்ளையும் முற்றும் துறந்து; சென்று அடிதொழுது - போய் அவன் அடியைத் தொழுது; தேன்பெய் என் நீள்குன்றம் செல்கு என்று - தேன்சொரியும் என்னுடைய பெருமலைக்குச் செல்வேன் என்றுரைத்து; குன்று உறை குறவன் போக - மலை வாழும் வேடன் சென்ற பிறகு; கூர் எரி வளைக்கப்பட்ட பஞ்சவர்போல நின்ற - (அரக்கு மாளிகையிற்) பெருந்தீயினால் வளைக்கப் பெற்ற தருமன் முதலான ஐவரையும் போலக் காட்டுத் தீயால் வளைப்புற்று நின்ற; பகட்டு இனம் பரிவு தீர்த்தான் - யானைத் திரளின் துன்பத்தை நீக்கினான்.
|
(வி - ம்.) சுதஞ்சணன் மலைக்கும் அரணபாதத்திற்கும் நடுவே இவ்விரண்டறமும் செய்தான். மழையைப் பெய்வித்து யானைகளின் வருத்தத்தை நீக்கினான் என்பார் நச்சினார்க்கினியர்.
|
( 72 ) |
வேறு
|
1238 |
இலங்கொளி மரகத மிடறி யின்மணி |
|
கலந்துபொன் னசும்புகான் றொழுகி மானினஞ் |
|
சிலம்புபாய் வருடையொ டுகளுஞ் சென்னிநீள் |
|
விலங்கல்சென் றெய்தினான் விலங்கன் மார்பினான். |
|
(இ - ள்.) இன்மணி கலந்து பொன் அசும்பு கான்று சிலம்பு ஒழுகி - இனிய மணிகள் பொன்னுடன் கலந்து ஊற்றுப் பெருகி மலைமீது பரந்து; மான் இனம் இலங்கு ஒளி மரகதம் இடறி -மான்திரள் விளங்கும் ஒளியையுடைய மரகத்தை இடறி; பாய் வருடையொடு உகளும் - பாயும் மலையாடுகளுடனே துள்ளித் திரிகின்ற; நீள் சென்னி விலங்கல் மார்பினான்
|