பதுமையார் இலம்பகம் |
706 |
|
சென்று எய்தினான் - நீண்ட முடியை உடைய அரணபாதம் என்னும் மலையை மலையனைய மார்பினான் சென்றடைந்தான்.
|
(வி - ம்.) கான்று - கக்கி, பெருகி. அசும்பு - ஊற்று.
|
மரகதம் - பச்சைமணி. இன்மணி - காட்சிக்கினிய மணி. சிலம்பு - மலை. வருடை - மலையாடு. சென்னி - உச்சி, விலங்கல் - மலை; ஈண்டு அரணபாதமலை.
|
( 73 ) |
1239 |
அந்தர வகடுதொட் டணவு நீள்புகழ் |
|
வெந்தெரி பசும்பொனின் விழையும் வெல்லொளி |
|
மந்திர வாய் மொழி மறுவின் மாதவ |
|
ரிந்திரர் தொழுமடி யினிதி னெய்தினான் |
|
(இ - ள்.) அந்தர அகடு தொட்டு - வானின் நடுவைத் தீண்டி; அணவு நீள்புகழ் - பொருந்தும் பெரும் புகழையும்; வெந்து எரி பசும் பொனின் - தீயில் வெந்து ஒளிரும் புதிய பொன்போல; விழையும் வெல்ஒளி - விரும்பத் தகும். பிற ஒளிகளை வெல்லும் ஒளியினையும்; மந்திர வாய்மொழி - மந்திரமாகிய வாய்மொழியினையுமுடைய; மறுஇல் மாதவர் - குற்றம் அற்ற முனிவரரின்; இந்திரர் தொழுமடி - வானவர் வணங்கும் அடியினை; இனிதின் எய்தினான் - வருந்தாமல் அடைந்தான்.
|
(வி - ம்.) இச் செய்யுளால் மலையடிவாரத்தில் முனிவர்களை முதலில் வணங்கினான் என்றறிக.
|
அந்தரம் - வானம். அகடு - நடுவிடம். அணவுதல் - வந்தெய்துதல். விழையும் : உவமவுருபு. மந்திரவாய் மொழி - மந்திரமாகிய வாய்மொழி என்க. மாதவர் - அருக சமயத்துறவியர்.
|
( 74 ) |
வேறு
|
1240 |
முனிவரு முயன்று வான்கண் |
|
மூப்பிகந் திரிய வின்பக் |
|
கனிகவர் கணனு மேத்தக் |
|
காதிகண் ணரிந்த காசி |
|
றனிமுதிர் கடவுள் கோயி |
|
றான்வலங் கொண்டு செல்வான் |
|
குனிதிரை முளைத்த வெய்யோன் |
|
குன்றுசூழ் வதனை யொத்தான். |
|
(இ - ள்.) முனிவரும் வான்கண் மூப்பு இகந்து இரிய இன்பக் கனிகவர் கணனும் முயன்று ஏத்த - முனிவர்களும் வானிடத்துத் தமக்கு வரும் மூப்புக் கைவிட்டுக் கெடும்படி
|