பதுமையார் இலம்பகம் |
707 |
|
யாக, ஆங்கே இன்ப கனியை நுகரும் வானவரும் முயன்று வாழ்த்த; காதி கண் அரிந்த காசி இல் தனி முதிர் கடவுள் கோயில் - உபாதிகளைத் தன்னிடத்தே நில்லாதவாறு வேரறுத்த குற்றம் அற்ற அருகன் கோயிலை; வலம் கொண்டு செல்வான் - வலம் கொண்டு செல்கிற சீவகன்; குனிதிரை முளைத்த வெய்யோன் - உயர்ந்து தாழும் அலையுடைய கடலிலே தோன்றிய ஞாயிறு; குன்று சூழ்வதனை ஒத்தான் - மேருவைச் சூழுந்தன்மையை ஒத்தான்.
|
(வி - ம்.) வான் - தேவருலகம். கணன் - கணம்; கூட்டம். காதி - ஞானாவரணீயம் முதலிய எட்டும்,. தனிமுதிர் கடவுள் - ஒப்பற்ற பழைய இறைவன் : அருகன். குன்று ஈண்டு மேரு.
|
( 75 ) |
1241 |
தண் கயம் குற்ற போதும் |
|
தாழ்சினை இளிந்த வீயும் |
|
வண் கொடிக் கொய்த பூவும் |
|
வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தித் |
|
திண் புகழ் அறிவன் பாதம் |
|
திருந்து கைத் தலத்தின் ஏற்றிப் |
|
பண்பு கொள் குணம் கொள் |
|
கீதம் பாணியில் பாடுகின்றான் |
|
(இ - ள்.) தண்கயம் குற்ற போதும் - குளிர்ந்த குளத்திலே பறித்த போதினையும்; தாழ்சினை இளிந்த வீயும் - தாழ்ந்த கிளைகளில் இணுங்கின மலரையும்; வண்கொடி கொய்த பூவும் - செழுவிய கொடிகளிற் பறித்த பூவையும்; மட்டு வார்ந்து உயிர்ப்ப ஏந்தி - தேன் பிலிற்றிச் சிந்த எடுத்து; திண்புகழ் அறிவன் பாதம் திருந்து கைத்தலத்தின் ஏற்றி - திணிந்த புகழையுடைய அருகன் திருவடியை அழகிய கைகளால் இட்டு வணங்கி; பண்புகொள் குணம்கொள் கீதம் - இயல்பு கொண்ட குணங்களைத் தன்னிடத்தே கொண்ட இசையை; பாணியின் பாடுகின்றான் - தாளத்தோடே பாடுகின்றான்.
|
(வி - ம்.) குற்றபோது - பறித்த மலர். இளிந்த வீ - இணுங்கின (பறித்த) மலர். மட்டு - தேன். அறிவன் - அருகக் கடவுள். பண்பு - இயல்பு. குணம் - இனிமைத்தன்மை என்க. கீதம் - இசை. பாணி - தாளம்.
|
( 76 ) |
வேறு
|
1242 |
ஆதி வேதம் பயந்தோய்நீ |
|
யலர்பெய்ம் மாரி யமைந்தோய்நீ |
|
நீதி நெறியை யுணர்ந்தோய்நீ |
|
நிகரில் காட்சிக் கிறையோய்நீ |
|
நாத னென்னப் படுவோய்நீ |
|
நவைசெய் பிறவிக் கடலகத்துன் |
|
பாத கமலந் தொழுவேங்கன் |
|
பசையாப் பவிழப் பணியாயே. |
|