பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 708 

   (இ - ள்.) ஆதி வேதம் பயந்தோய் நீ! - முதல் மறையை நல்கினை நீ!; அலர்பெய் மாரி அமைந்தோய் நீ! - மலர் மாரியிலே பொருந்தினை நீ; நீதி நெறியை உணர்ந்தோய் நீ! - நன்னெறியை அறிந்தனை நீ!; நிகர்இல் காட்சிக்கு இறையோய் நீ - ஒப்பில்லாத அறிவுக்குத் தலைமையை நீ!; நாதன் என்னப்படுவோய் நீ!- தலைவனென்று கூறப்படுவோய் நீ!; உன் பாத கமலம் தொழுவேங்கள் - (இவ்வாறு) நின் திருவடித் தாமரையை வணங்குவேமுடைய; நவைசெய் பிறவிக் கடலகத்து - குற்றந்தரும் பிறவிக் கடலிலே; பசை யாப்பு அவிழப் பணியாய் - பற்றாகிய தொடர்ச்சி நீங்கும் படி திருவுள்ளம் பற்றுவாய்.

   (வி - ம்.) ஆதி வேதம் : கொலை முதலியன கூறாத மறை.

   ஆதிவேதம் என்றது, அருகாகமத்தை, ”வேதமுதல்வன் விளங்கொளி ஓதிய வேதத்தொளி' என்றார் இளங்கோவடிகளாரும் (சிலப். 10. 189 - 90). நிகரில் காட்சி என்றது, நற் காட்சியை. நாதன் - இறைவன். நவை - துன்பம். பசையாப்பு - ஆசைத்தொடர்பு.

( 77 )
1243 இன்னாப் பிறவி யிகந்தோய்நீ
   யிணையி லின்ப முடையோய்நீ
மன்னா வுலக மறுத்தோய்நீ
  வரம்பில் காட்சிக் கிறையோய்நீ
பொன்னா ரிஞ்சிப் புகழ்வேந்தே
  பொறியின் வேட்கைக் கடலழுந்தி
யொன்னா வினையி னுழல்வேங்க
   ளுயப்போம் வண்ண முரையாயே.

   (இ - ள்.) பொன் ஆர் இஞ்சிப் புகழ் வேந்தே! - பொன்னாற்செய்த மதில் சூழ்ந்த இருப்பிடத்தில் உள்ள புகழ்மிகும் இறையே; இன்னாப் பிறவி இகந்தோய் நீ! - துன்பப் பிறவியைக் கடந்தனை நீ!; இணைஇல் இன்பம் உடையோய் நீ! - ஒப்பற்ற இன்பம் உடையை நீ!; மன்னா உலகம் மறுத்தோய் நீ - நிலையற்ற துறக்கத்தை வெறுத்தனை நீ!; வரம்புஇல் காட்சிக்கு இறையோய் நீ! - எல்லையற்ற காட்சிக்குத் தலைமையை நீ!; பொறியின் வேட்கைக் கடல் அழுந்தி - ஐம்பொறி வேட்கையாகிய கடலிலே முழுகி; ஒன்னா வினையின் உழல்வேங்கள் - பொருந்தாத தீவினையாலே வருந்தும் யாங்கள்; உயப்போம் வண்ணம் உரையாய் - வாழ்ந்துபோம் வகையை அருளிச் செய்வாய்.

   (வி - ம்.) இணையில் இன்பம் - அநந்த சுகம். மறுத்தல் - இன்பத்தைத் தவிர்த்தல்.

   இன்னாப்பிறவி - துன்பத்திற்குக் காரணமான பிறப்பு. மன்னா உலகம் - நிலையுதலில்லாத உலகம். இதற்கு நிலைபேறுடைய சுவர்க்கம்