நாமகள் இலம்பகம் |
71 |
|
பொழுது சிந்துகின்ற) பொற்றுகளோடு; கடிகமழ் பூத்துகள் கழுமிய பொலிவினது ஒருபால் - மணங்கமழும் மலர்த்துகளும் கலந்த பொலிவுடையது ஒரு பக்கம்.
|
|
(வி - ம்.) விளியெனினும் சீழ்க்கையெனினும் வீளையெனினும் ஒக்கும். காய்த்துறு - காய்ச்சலுற்ற.
|
( 91 ) |
121 |
மைந்தரொ டூடிய மகளிரை யிளையவ |
|
ரந்துகில் பற்றலின் காசரிந் தணிகிளர் |
|
சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின்னணிந் |
|
திந்திர திருவிவி னெழிலின தொருபால். |
|
(இ - ள்.) மைந்தரொடு ஊடிய மகளிரை இளையவர் அம்துகில் பற்றலின் - கணவருடன் பிணங்கிய மகளிரின் அழகிய துகிலை அக்கணவர் பற்றும்போது; காசு அரிந்து அணிகிளர் சுந்தர நிலமிசைச் சொரிதலின் - காசு கோவையற்று அழகிய நலம் நிறைந்த நிலத்தில் சிந்துதலின்; மின் அணிந்து இந்திர திருவிலின் எழிலினது ஒருபால் - ஒளிகொண்டு வானவில்லின் அழகினையுடையது ஒரு பக்கம்.
|
|
(வி - ம்.) நிலமிசை என்பதனை 'நிலம் விசை' என்று நச்சினார்க்கினியர் பாடம் கொண்டனர் என்பது அவருரையான் விளங்கும்.
|
( 92 ) |
122 |
வளையறுத் தனையன வாலரி யமைபத |
|
மளவறு நறுநெயொ டடுகறி யமைதுவை |
|
விளைவமை தயிரொடு மிசைகுவிர் விரையுமி |
|
னுளவணி கலமெனு முறையின தொருபால். |
|
(இ - ள்.) வளைஅறுத் தளையன வால்அரி அமைபதம் - சங்கை நுண்ணிதாக அறுத்தாற்போன்ற வெள்ளிய அரிசியால் அமைத்த சோற்றையும்; அளவறு நறுநெய்யொடு அடுகறி - அளவற்ற நல்ல நெய்யாற் சமைத்த கறியையும்; விளைவு அமைதயிரொடு அமைதுவை - முற்றிய தயிரால் அமைத்த துவையினையும்; மிசைகுவிர் விரையுமின் - உண்பதற்கு விரைந்து செல்லுமின்; அணிகலம் உள எனும் உரையினது ஒருபால் - (உண்டபின் தருதற்கு) அணிகலன்களும் உள்ளன என்னும் மொழியினையுடையது ஒரு பக்கம்.
|
|
(வி - ம்.) தயிரொடு : ஒடு : எண்ணுப்பொருளில் வந்த 'ஒடுவும் ஆம். 'வாலவிழும்' என்றும் பாடம்.
|
|
அந்நகரத்து மக்கள் தம்மனையில் விருந்துண்போர்க்குக் கூலியும் கொடுக்கும் மாண்பினர் என்பது போதர 'உள அணிகலனும்' என்றார்.
|
( 93 ) |