பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 710 

நீ அன்றே ! - காவலையுடைய மதிலையும் காவல் அழித்த காவலன் நீயே அன்றே?

   (வி - ம்.) உலகம் : ஆகுபெயர். அலர்மாரி - பூவாகிய மழை என்க. முடியுலகம் : வினைத்தொகை. நிமிர்ந்தவன் - முத்தியை அடைந்தவன். மூன்று கடிமதில் - காமம் வெகுளி மயக்கம் என்கின்ற மூவகை மதில். இவை வீடுபேற்றிற்குத் தடையாய் நிற்றலின் மதில் என்றார்.

( 80 )
1246 முரணவிய வென்றுலக மூன்றினையு மூன்றிற்
றரணிமேற் றந்தளித்த தத்துவன்றான் யாரே
தரணிமேற் றந்தளித்தான் றண்மதிபோ னேமி
யரணுலகிற் காய வறிவரனீ யன்றே.

   (இ - ள்.) முரண் அவிய வென்று - (மூன்று மதிலையும்) மாறுபாடு கெட வென்று; மூன்றின் - உலகம் மூன்றினையும்; தரணிமேல் தந்து அளித்த - அங்கம் பூர்வம் ஆதியென்கின்ற மூன்று ஆகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் உலகிலே தந்து வெளிப்படக் கூறிய; தத்துவன்தான் யார்?- உண்மைப் பொருளாவான் யார்தான்!; தரணிமேல் தந்து அளித்தான் - ; தண்மதிபோல் நேமி - குளிர்ந்த திங்கள்போலும் அறவாழியையுடைய; உலகிற்கு அரண் ஆய அறிவுவரன் நீ அன்றே - உலகிற்குக் காவலாக உள்ள அறிவுக்கு வரனாகவுள்ள நீயே அன்றோ?

   (வி - ம்.) அங்கம் முதலியன சைனாகமங்கள்.

   முரண் - மாறுபாடு, மூன்றின் - ஆகமம் மூன்றானும்; அவையாவன: அங்காகமம், பூர்வாகமம், பகுசுருதியாகமம் என்பன. தத்துவன் - உண்மைப் பொருளாயுள்ளவன். அறிவரன் - அறிவுக்கு வரனாயுள்ளவன்.

( 81 )
1247 தீராவினை தீர்த்துத் தீர்த்தந் தெரிந்துய்த்து
வாராக் கதியுரைத்த வாமன்றான் யாரே
வாராக் கதியுரைத்த வாமன் மலர்ததைந்த
காரார்பூம் பிண்டிக் கடவுணீ யன்றே

   (இ - ள்.) தீரா வினைதீர்த்து - நீங்காத வினையை நீக்கி; தீர்த்தம் தெரிந்து உய்த்து - ஆகமத்தை ஆராய்ந்தருளி; வாராக்கதி உரைத்த வாமன்தான் யார்? - மேல் வருதலில்லாத வீட்டினை உரைத்த வாமன் யார்தான்?; வாராக்கதி உரைத்த வாமன் - மலர்; ததைந்த காரார் பூம்பிண்டிக் கடவுள் நீ அன்றே?- மலர்கள் நிறைந்த, கார்காலத்தில் தழைக்கும் அழகிய அசோகின் நீழலின் அமர்ந்த கடவுளாகிய நீயே அன்றோ?