பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 714 

1254 குழலெடுத் தியாத்து மட்டார்
  கோதையிற் பொலிந்து மின்னு
மழலவிர் செம்பொற் பட்டங்
   குண்டல மாரந் தாங்கி
நிழலவி ரல்குற் காசு
   சிலம்பொடு சிலம்ப நீடோ
ளழகிகூத் தாடு கின்றா
  ளரங்கின்மே லரம்பை யன்னாள்.

   (இ - ள்.) அரம்பை அன்னாள் நீள்தோள் அழகி - வானவர் மகள் போன்றாளாகிய நீண்ட தோளையுடைய அழகியொருத்தி; குழல் எடுத்து யாத்து - கூந்தலை எடுத்துக் கட்டி; மட்டு ஆர் கோதையின் பொலிந்து - தேன் நிறைந்த மலர்மாலையாலே அழகு பெற்று; மின்னும் அழல் அவிர் செம்பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி - நெருப்பென ஒளிரும் செம்பொன்னாலான பட்டமும் குண்டலமும் ஆரமும் அணிந்து; அல்குல் நிழல் அவிர்காசு சிலம்பொடு சிலம்ப - அல்குல் மேலணிந்த மேகலைக்காசுடன் சிலம்பும் ஒலிக்க; அரங்கின் மேல் கூத்து ஆடுகின்றாள் - அரங்கின் மீது கூத்தாடுகின்றாள்.

   (வி - ம்.) ”வாடிய வண்தளிர் அன்ன மேனி - ஆடியன் மகளிர் அமைதி கூறின் - நெறியின் நீங்கிய நெடிய ரல்லோர் - குறியிற் குறைந்த குறியர் அல்லோர் - பாற்கடல் இல்லாப் பருமை யில்லோர்” என்னும் சூத்திரத்திற் கூறிய நிலைகளுடனே ஆசிரியன் இட்ட அழகு கிடத்தலின், அழகி யென்றார்- என்பர் நச்சினார்க்கினியர்.

( 89 )
1255 தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயிலத் தண்பூங்
கண்ணொடு புருவங் கைகால் கலையல்கு னுசுப்புக் காம
ரொண்ணுதல் கொண்ட வாடற் றொட்டிமை யுருவ நோக்கி
வெண்ணெய்தீ யுற்ற வண்ணமாடவர் மெலிகின் றாரே

   (இ - ள்.) தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயில - தண்ணுமையும் முழவமும் வீணையும் குழலும் ஒத்திசைக்க; தண்பூங் கண்ணொடு புருவம் கைகால் கலை அல்குல் நுசுப்புக் காமர் ஒண் நுதல் கொண்ட - தண்ணிய மலரனைய கண் முதலாக அழகிய ஒள்ளிய நுதலாள் கொண்ட; ஆடல் தொட்டிமை