நாமகள் இலம்பகம் |
72 |
|
|
123 |
வரைநிரை யருவியின் மதமிசை சொரிவன |
|
புரைநிரை களிறொடு புனைமணி யியறோ் |
|
விரைநிரை யிவுளியொ டிளையவர் விரவுபு |
|
குரைநிரை குளிர்புனல் யாற்றின தொருபால். |
|
(இ - ள்.) வரைநிரை அருவியின் மதம்மிசை சொரிவன - மலையிலிருந்து வீழும் ஒழுங்கான அருவியைத் தம்மேலே சொரிந்து கொள்வனபோல மதத்தை மேலே சொரிவனவாகிய; புரைநிரை களிறொடு - உயர்ச்சியுறுங் களிற்றோடும்; புனைமணி இயல்தேர் விரைநிரை இவுளியொடு - மணிபுனைந்த தேரிற் பூட்டினால் விரைந்து செல்லும் குதிரைகளோடும்; இளையவர் விரவுபு - இளைஞர்கள் கலந்து; குரைநிரை குளிர்புனல் யாற்றினது ஒருபால் - ஒலியுடன் நிரைத்த குளிர்ந்த நீர்செல்லும் யாறுடையது ஒரு பக்கம்.
|
|
(வி - ம்.) அருவிபோல் வீழ்கின்ற மதமென்பாரும் உளர். 'மிகை' என்றும் பாடம்.
|
( 94 ) |
124 |
வரிவளை யரவமும் மணிமுழ வரவமு |
|
மரிவளர் கண்ணிய ரணிகல வரவமும் |
|
புரிவளர் குழலொடு பொலிமலி கவினிய |
|
திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம். |
|
(இ - ள்.) வரிவளை அரவமும் - சங்கொலியும்; மணிமுழவு அரவமும் - முழவொலியும்; அரிவளர் கண்ணியர் அணிகல அரவமும் - செவ்வரி பரவிய கண்ணினருடைய பூண்களின் ஒலியும்; புரிவளர் குழலொடு - நரம்பிடத்து இசைவளர்தற்குக் காரணமான குழலொலியொடு; பொலிமலி கவினிய திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம் - பொலிவுமிக்க அழகுடைய செல்வம் நிறைந்த மனைகளைப் பற்றிச் செவ்விதாகக் கூறுவோம்.
|
|
(வி - ம்.) புரிவளர் குழல் - நரம்பிடத்து இசை வளர்தற்குக் காரணமாகிய குழல். 'குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர்- முழவியம்ப லாமந் திரிகை' (கூத்தநூல்.) புரி - விருப்பமுமாம்.
|
|
இஃது அரசற்குரியவர் இருப்பு.
|
( 95 ) |
வேறு
|
|
125 |
பாவை யன்னவர் பந்து புடைத்தலிற் |
|
றூவி யன்னம் வெரீஇத்துணை யென்றுபோய்க் |
|
கோவை நித்தில மாடக் குழாமிசை |
|
மேவி வெண்மதி தன்னொ டிருக்குமே. |
|