பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 721 

   (வி - ம்.) வந்த வீரன் கொணரும் செய்தி பதுமை யென்னும் அரசகுமரியைப் பாம்பு தீண்டிய தாதலின் 'உருமின் தோன்றி' என்றார். இனி, 'உறுமிற் சொன்னான்' எனக் கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

( 101 )
1267 கொய்தகைப் பொதியிற் சோலைக் குழவிய முல்லை மௌவல்
செய்யசந் திமயச் சாரற் கருப்புரக் கன்று தீம்பூக்
கைதரு மணியிற் றெண்ணீர் மதுக்கலந் தூட்டி மாலை
பெய்தொளி மறைத்து நங்கை கபிறையென வளர்க்கின் றாளே.

   (இ - ள்.) கொய்தகைப் பொதியில் சோலை - கொய்யத் தகுந்த பொதியில் என்னும் சோலையிலே; குழவிய முல்லை மௌவல் செய்ய சந்து இமயச் சாரல் கருப்புரக் கன்னு தீம்பூ - குழவியாகிய முல்லையினையும், செம்முல்லையினையும், செவ்விய சந்தனக் கன்றினையும், இமயச் சாரலில் வளரும் கருப்புரக் கன்றினையும், தீம் பூவையும்; கை தரு மணியின் தெண்ணீர் மதுக் கலந்து ஊட்டி - வரிசையாகப் பதித்த சந்திரகாந்தக் கல்லினின்றுங்தோன்றிய தெளிந்த நீரைத் தேனைக் கலந்து ஊட்டி; மாலை பெய்து ஒளிமறைத்து - மாலையை மூட்டாகப் பெய்து கதிரொளியை மறைத்து; பிறை என நங்கை வளர்க்கின்றாள் - பிறை போலப் பதுமை வளர்க்கின்றனள்.

   (வி - ம்.) குழவிய : அ : அசை. 'பிள்ளை குழவி கன்றே போத்தெனக் - கொள்ளவும் அமையும் ஓரறி வுயிர்க்கே' (தொல். மரபு. 24.) இரண்டு மலையினும் இவன் ஆணை அறிவித்தற்குப் 'பொதியிற் சோலைக் குழவிய முல்லை' எனவும,் 'இமயச்சாரற் கருப்புக் கன்றினை'யுங்கூறினார்.

( 102 )
1268 பவழங்கொள் கோடு நாட்டிப் பைம்பொனால் வேலி கோலித்
தவழ்கதிர் முத்தம் பாய்த்தித் தன்கையாற் றீண்டி நன்னாட்
புகழ்கொடி நங்கை தன்போ் பொறித்ததோர் கன்னி முல்லை
யகழ்கடற் றானை வேந்தே யணியெயி றீன்ற தன்றே.