| பதுமையார் இலம்பகம் | 
726  | 
  | 
| 
 மிக்கிட்டது - வெண்மையான பற்களையுடைய பாம்பு உகுத்த நஞ்சின் வேகம் மிகுந்தது. 
 | 
| 
    (வி - ம்.) ஊறு - நஞ்சிற்கு இடையூறான மந்திரமும் மருந்தும். 
 | 
| 
    வள்ளல் : உலோகபாலன். அள்இலைப் பூணினாளுக்கு - நெருங்கிய இலைத்தொழிலமைந்த அணிகலனுடைய பதுமைக்கு. ஆவி - உயிர். நஞ்சின் வேகம் மிக்கது என ஒருசொல் வருவித்துக்கொள்க. 
 | 
( 109 ) | 
|  1275 | 
பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி நாக |  
|   | 
நங்கையைச் செற்ற தீங்குத் தீர்த்துநீர் கொண்மி னாடும் |  
|   | 
வங்கமா நிதிய நல்கி மகட்டரு மணிசெய் மான்றே |  
|   | 
ரெங்களுக் கிறைவ னென்றாங் கிடிமுர செருக்கி னானே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பைங்கதிர் மதியம் என்று - புதிய கதிர்களையுடைய (மறுவில்லாத) திங்கள் என்று எண்ணி; பகை அடு வெகுளி நாகம் - (மறு வுற்ற திங்களாகிய) பகையைக் கெடுக்க எண்ணி வெகுண்ட நாகம்; நங்கையை ஈங்குச் செற்றது - பதுமையை இங்குக் கையிலே கடித்தது; மணி செய் மான் தேர் எங்களுக்கும் இறைவன் - மணிகளிழைத்த, குதிரை பூட்டிய தேரையுடைய எங்கள் அரசன் தனபதி; நாடும் வங்கம் ஆம் நிதியும் நல்கி மகள் தரும் - (நஞ்சைத் தீர்த்தவற்கு) நாடும் கலம் தந்த செல்வமும் கொடுத்துப் பதுமையையும் அளிப்பான்; நீர் தீர்த்துக்கொண்மின் - நஞ்சைப் போக்கும் ஆற்றலுடையீர் நீக்கி அவற்றை ஏற்றுக் கொண்மின்; என்று ஆங்கு இடிமுரசு எருக்கினான் - என்றுரைத்து அந் நகரெங்கும் இடியென முரசு அறைவித்தான். 
 | 
| 
    (வி - ம்.) ”பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி நாகம் நங்கையைச் செற்றது” என்பதற்கு 'மறுச்சேர் மதியாகிய பகையை அடுகின்ற வெகுளியையுடைய நாகம் இது நாம் தீண்டுமதன்றி மறுவிலாத தொரு மதியிருந்ததென்று எண்ணுதலாலே நங்கையைக் கையிலே கடித்தது' எனப்பொருள் விரித்தனர் நச்சினார்க்கினியர். 
 | 
( 110 ) | 
|  1276 | 
மண்டலி மற்றி தென்பா ரிராசமா நாக மென்பார் |  
|   | 
கொண்டது நாக மென்பார் குறைவளி பித்தொ டையிற் |  
|   | 
பிண்டித்துப் பெருகிற் றென்பார் பெருநவை யறுக்கும் விஞ்சை |  
|   | 
யெண்டவப் பலவுஞ் செய்தா மெனறுகே ளாதி தென்பார். | 
 
 
 |