பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 728 

1278 கையொடு கண்டங் கோப்பார் கனைசுட ருறுப்பின் வைப்பார்
தெய்வதம் பரவி யெல்லாத் திசைதொறுந் தொழுது நிற்பா
ருய்வகை யின்றி யின்னே யுலகுடன் கவிழு மென்பார்
மையலங் கோயின் மாக்கண் மடைதிறந் திட்ட தொத்தார்.

   (இ - ள்.) கையொடு கண்டம் கோப்பார் - கையையும் கண்டத்தையும் தடைமரத்தைக் கோப்பார்; கனைசுடர் உறுப்பின் வைப்பார் - உறுப்புக்களிலே விளக்கெரிப்பார்; தெய்வதம் பரவி எல்லாத் திசைதொறும் தொழுது நிற்பார்- தெய்வங்களைப் போற்றி எல்லாத் திக்கினும் வணங்கி நிற்பார்; உய்வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார் - இதனால் அரசன் பிழைக்க வழியின்றேல் உலகும் இன்னே கவிழும் என்பார்; மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார் - (இங்ஙனம்) மயக்கத்தையுடைய அரண்மனை மக்கள் ஆரவாரத்தினாலே மடைதிறந்த தன்மையை ஒத்திருந்தனர்.

   (வி - ம்.) மக்கட்குரிய மனன் இன்றி அறிவு கெட்டமையின், ஐயறிவுடையரென்று, 'மாக்கள்' என்றார்.

( 113 )
1279 வெந்தெரி செம்பொற் பூவும்
  விளங்குபொன் னூலும் பெற்றார்
மந்திர மறையும் வல்லா
   ரெழாயிரர் மறுவில் வாய்மை
யந்தரத் தறுவை வைப்பா
   ரந்தண ரங்கை கொட்டிப்
பைந்தொடிப் பாவை யின்னே
  பரிவொழிந் தெழுக வென்பார்.

   (இ - ள்.) வெந்து எரி செம்பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார் - தீயில் வெந்து விளங்கும் பொன்மலரும் ஒளிரும் பொன்னூலும் பெற்றவர்களாய்; மந்திரம் மறையும் வல்லார் - மந்திரமும் மறையும் வல்லவர்களாய்; மறுஇல் வாய்மை அந்தரத்து அறுவை வைப்பார் - குற்றம் அற்ற மந்திரத்தாலே வானிலே ஆடையை நிறுவுவார்களாய் உள்ள; எழாயிரர் அந்தணர் - ஏழாயிரவராகிய அந்தணர்கள்; அங்கை கொட்டி - கையைத் தட்டி; பைந்தொடிப் பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக