| பதுமையார் இலம்பகம் |
729 |
|
|
என்பார் - பைந்தொடி யணிந்த பாவையனையாள் இப்பொழுதே வருத்தம் நீங்கி எழுக என்பார்.
|
|
(வி - ம்.) பொற்பூவும் பொற்பூணூலும் அத்தொழிற் றிறமுடையார் என்பதற்குப் பெற்ற சிறப்புக்கள் என்க. மந்திரமும் எனற்பால உம்மை தொக்கது. வாய்மை மந்திரத்திற்கு ஆகுபெயர். அறுவை - புடைவை. பாவை : பதுமை.
|
( 114 ) |
| 1280 |
பாம்பெழப் பாம்பு கொண்டாற் பகவற்கு மரிது தீர்த்த |
| |
றேம்பிழி கோதைக் கின்று பிறந்தநா டெளிமி னென்று |
| |
காம்பழி பிச்ச மாகக் கணியெடுத் துரைப்பக் கல்லென் |
| |
றூம்பழி குளத்திற் கண்ணீர் துகணிலத் திழிந்த தன்றே. |
|
|
(இ - ள்.) பாம்பு எழப் பாம்பு கொண்டால் பகவற்கும் தீர்த்தல் அரிது - இராகு என்னும் பாம்பு ஞாயிற்றை மறைக்கும் பொழுது பாம்பு தீண்டில் இறைவனுக்கும் அதனைத் தீர்த்தல் அருமை; தேன்பிழி கோதைக்குப் பிறந்த நாள் இன்று - தேன் பிழியும் கோதையாளுக்குப் பாம்பு எழப் பாம்பு கொண்டதும் இல்லை, பாம்பு தீண்டுகின்ற காலத்துப் பிறந்த நாம் இல்லை ; காம்பு அழிபிச்சமாகத் தெளிமின் என்று - உதய ஆரூடக் கவிப்புகளிற் கவிப்பாக ஆராய்ந்து தெளியுங்கோள் என்று; கணி எடுத்து உரைப்ப - கணிநூலை யெடுத்துக் கூறக்கேட்டு; கல்லென் தூம்புஅழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது - கல்லென்னும் ஒலியுடன் மடையுடைந்த குளம்போலக் கண்ணீரானது புழுதியையுடைய நிலமிசை பெருகிற்று.
|
|
(வி - ம்.) இன்று : எதிர்மறை வினைக்குறிப்பு முற்று. பிச்சம் - பீலிக் குடை. காம்பு அழிபிச்சம் - காம்பு இல்லத பீலிக்குடை. ஞாயிற்றின் விமானம் பீலியாற் செய்யப்படுதலின், அதனைப் பீலியாற் செய்யப்படும் பிச்சம் என்றார். எனவே, ஞாயிறு நடுவே கவிப்பாக நின்றது என்றவாறாயிற்று. இதனாற் பயன் : 'அக் காலத்துத் தெய்வம் மாயோன் ஆதலின், அவன் கருடனுடனே உலகைப்பார்க்கின்றதால், அக்கருடன் பார்வையால் நஞ்சு நீங்குதலாம்' என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 115 ) |
| 1281 |
நங்கைக்கின் றிறத்த லில்லை |
| |
நரபதி நீயுங் கேண்மோ |
| |
கொங்கலர் கோங்கி னெற்றிக் |
| |
குவிமுகிழ் முகட்டி னங்கட் |
| |
டங்குதே னரவ யாழிற் |
| |
றானிருந் தாந்தை பாடு |
| |
மிங்குநம் மிடரைத் தீர்ப்பா |
| |
னிளையவ னுளன்மற் றென்றான் |
|