பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 731 

1283 பறவைமா நாகம் வீழ்ந்து
   பலவுடன் பதைப்ப போன்றுஞ்
சிறகுறப் பரப்பி மஞ்ஞை
   செருக்குபு கிடந்த போன்றுங்
கறவைகன் றிழந்த போன்றுங்
  கிடந்தழு கின்ற கண்ணா
ரிறைவளை யவரை நோக்கி
  யென்கொடி துற்ற தென்றான்.

   (இ - ள்.) பறவை மாநாகம் பல வீழ்ந்து உடன் பதைப்ப போன்றும் - கோழிப் பாம்புகள் பல விழுந்து ஒருங்கே பதைப்பன போன்றும்; மஞ்ஞை சிறகு உறப் பரப்பி செருக்குபு கிடந்த போன்றும் - மயில்கள் சிறகுகளை நன்றாகப் பரப்பி மயங்கிக் கிடந்தன போன்றும்; கறவை கன்று இழந்த போன்றும் - கறவைப் பசுக்கள் கன்றை இழந்து கிடப்பன போன்றும்; கிடந்து அழுகின்ற கண்ணார் இறைவளையவரை நோக்கி - கிடந்து அழுங்கண்ணினராகிய மங்கையரைப் பார்த்து; உற்றது என் கொடிது என்றான் - இவரடைந்தது என்னே கொடிதாயிருந்தது என்றெண்ணினான்.

   (வி - ம்.) பறவை மாநாகம் : ஈண்டுப் பெண்பாலாகிய கூனும் குறளும். உவமேயப் பொருள்கள் : மயில் தோழியர்க்கும், கறவை செவிலியர்க்கும் உவமை.

( 118 )
1284 ஊறுகொள் சிங்கம் போல வுயக்கமோ டிருந்த நம்பி
கூறினான் கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து மற்றுன்
வீறுயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி யின்னே
நாறுபூங் கொம்ப னாளை நோக்கென நம்பி சொன்னான்.

   (இ - ள்.) ஊறுகொள் சிங்கம்போல உயக்கமோடு இருந்த நம்பி கூறினான் - வருத்தமுற்ற சிங்கத்தைப்போல வருந்தியிருந்த உலோக பாலன் கூறினான்; கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து - வெற்றி வேந்தனாகிய வளமிகு செல்வ நிலத்திலே; உன் வீறு உயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி - உன்னுடைய சிறப்பு மிக்க புகழை நட்டு நட்பை விளைக்க வல்லாய்; நாறு பூங்கொம்பனாளை இன்னே நோக்கு என - மணமலர்க் கொடி போன்ற பதுமையை இப்போதே காண்பாயாக என்று சொல்ல; நம்பி சொன்னான் - சீவகன் கூறினான்.

   (வி - ம்.) விளைத்தி : படுத்தலோசையாக்குக என்பர் நச்சினார்க்கினியர்.