| பதுமையார் இலம்பகம் |
732 |
|
|
உயக்கம் - துன்பம். நம்பி இரண்டனுள் முன்னது உலோகபாலன்; பின்னது சீவகன், வேந்தன் : தனபதி. புகழ் - ஈண்டு விச்சைக்கு ஆகுபெயர். இவனால் அவர் கேண்மை வளர்தலின் விச்சையை வித்தாகவும் கேண்மையைப் பயிராகவும் உருவகித்தார்.
|
( 119 ) |
| 1285 |
புற்றிடை வெகுளி நாகம் |
| |
போக்கறக் கொண்ட தேனு |
| |
மற்றிடை யூறு செய்வான் |
| |
வானவர் வலித்த தேனும் |
| |
பொற்றொடிக் கிறத்த லில்லை |
| |
புலம்புகொண் டழேற்க வென்றான் |
| |
கற்றடிப் படுத்த விஞ்சைக் |
| |
காமரு காம னன்னான் |
|
|
(இ - ள்.) கற்று அடிப்படுத்த விஞ்சை காமரு காமன் அன்னான் - கற்றுப் பழகிய விஞ்சையையுடைய விருப்பம் பொருந்திய சீவகன்; புற்றிடை வெகுளி நாகம் போக்கு அறக் கொண்ட தேனும் - புற்றிலுள்ள வெகுளியையுடைய நாகம் மீளாதபடி கடித்ததானாலும்; மற்று இடையூறு செய்வான் வானவர் வலித்த தேனும் - வேறு இடையூறு செய்வதற்கு விண்ணவர் சூழ்ந்த நிலையாயினும்; பொற்றொடிக்கு இறத்தல் இல்லை - நங்கைக்கு இறப்புக் கிடையாது; புலம்பு கொண்டு அழேற்க என்றான் - நீ வருத்தம் கொண்டு அழாதேகொள் என்றான்.
|
|
(வி - ம்.) காமன் அன்னான் : சீவகனுக்கு ஒரு பெயர்.
|
|
போக்கு - மீட்சி, பொற்றொடிக்கு என்பது சுட்டுப்பொருட்டாய் நின்றது. அழேற்க - அழாதேகொள்.
|
( 120 ) |
| 1286 |
பொழிந்துநஞ் சுகுத்த லச்ச |
| |
மிரைபெரு வெகுளி போகங் |
| |
கழிந்துமீ தாடல் காலம் |
| |
பிழைப்பென வெட்டி னாகும் |
| |
பிழிந்துயி ருண்ணுந் தட்ட |
| |
மதட்டமாம் பிளிற்றி னும்ப |
| |
ரொழிந்தெயி றூனஞ் செய்யுங் |
| |
கோளென மற்றுஞ் சொன்னான் |
|
|
(இ - ள்.) நஞ்சு பொழிந்து உகுத்தல் அச்சம் இரை பெரு வெகுளி போகம் கழிந்து மீதாடல் காலம் பிழைப்பு என - நஞ்சைப் பெய்து சிந்துதல், அச்சம், இரையெனக் கருதுதல், பெரிய வெகுளி, இன்பம், மனக்களி மிகுந்து நின்றாடுதல்,
|