பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 734 

 1288   மண்டலிப் பால தென்றான்.
  மன்னிய தெண்மட் டாயின்
    கொப்புளாம் விரலிற் றேய்த்தான்
  கொன்னுமா நாகங் கொண்டாற்

   (இ - ள்.) விரலின் தேய்த்தால் - கடித்த வாயை விரலால் தேய்த்தால்; கொன்னும் மாநாகம் கொண்டாற் கொப்புளாம் - அச்சந்தரும் பெருநாகந் தீண்டியதாயின் கொப்புள் கொள்ளும்; மன்னிய தௌ்மட்டு ஆயின் மண்டலிப்பாலது - பொருந்திய தெளிவான தேன்போல நீர் வருமாயின் மண்டலிப் பகுதியாகும்; கன்னியைக் கடித்த நாகம் கன்னியே - (இது கொப்புள் கொள்வதால்) இவளைக் கடித்த பாம்பு கன்னியே; அரசர் சாதி - சாதியும் அரசர் சாதியே; அழுந்தி ஆழ்ந்த மூன்று எயிறு - தைத்து அழுந்தி ஆழ்ந்த பற்கள் யமதூதி ஒழிந்த காளி, காளாத்திரி, இயமன் என்னும் மூன்றுமே; கன்னி நோக்கம் - உதயமும் கன்னியே; அன்னதே - ஆதலின் இஃது இறத்தலில்லை.

   (வி - ம்.) குக்குட சர்ப்பமாதலின், அதற்குக் கேடில்லை யென்று கருதி, 'கன்னியே' என்றான்.

   இது கொப்புளங் கொள்ளலின் இவளைக் கடித்த பாம்பு கன்னியே என்பது கருத்து. சாதி அரசர்சாதி என்க. காளி காளாத்திரி யமன் யமதூதி என்னும் நான்கு நஞ்சுப் பற்களுள் யமதூதி ஒழிந்த மூன்று பற்களுமே அழுந்தியுள்ளன.

( 123 )
1289 குன்றிரண் டனைய தோளான்
   கொழுமலர்க் குவளைப் போதங்
கொன்றிரண் டுருவ மோதி
   யுறக்கிடை மயில னாடன்
சென்றிருண் டமைந்த கோலச்
   சிகழிகை யழுத்திச் செல்வ
னின்றிரண் டுருவ மோதி<
   நோ்முக நோக்கி னானே.

   (இ - ள்.) குன்று இரண்டு அனைய தோளான் செல்வன் - மலைகள் இரண்டு போன்ற தோளையுடைய சீவகனான செல்வன்; கொழுமலர்க் குவளைப் போது அங்கு ஒன்று இரண்டு உருவம் ஓதி - வளமிகு மலராகிய குவளையை அங்கே மூன்று உருவம் ஓதி; உறக்கு இடை மயிலனாள் தன் சென்று இருண்டு அமைந்த கோலச் சிகழிகை அழுத்தி - உறக்கத்திலுள்ள மயில் போன்றவளின் நீண்டு இருண்டு அமைந்த அழகிய மயிர் முடியிலே