| பதுமையார் இலம்பகம் |
735 |
|
|
அழுத்தி; நின்று இரண்டு உருவம் ஓதி நேர்முகம் நோக்கினான் - பெயர்ந்து நின்று பின்னும் இரண்டு உருவம் ஓதி முகத்தை நேரே நோக்கினான்.
|
|
(வி - ம்.) மலர்க்குவளை: மலர்: அடைமொழி. ஒன்றிரண்டு உம்மைத்தொகை. உருவம் : உரு என்பதன் திரிபு. உறப்பிடை: சாரியை இன்றி உருபேற்றது. முகம் - தியானம். இவன் ஐந்து உரு ஓதினமையின் இம் மந்திரம் பஞ்ச நமஸ்காரம்.
|
( 124 ) |
| 1290 |
நெடுந்தகை நின்று நோக்க நீள்கடற் பிறந்த கோலக் |
| |
கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிரு ளுடைந்த தேபோ |
| |
லுடம்பிடை நஞ்சு நீங்கிற் றொண்டொடி யுருவ மார்ந்து |
| |
குடங்கையி னெடிய கண்ணாற் குமரன்மே னோக்கி னாளே |
|
|
(இ - ள்.) நெடுந்தகை நின்று நோக்க - சீவகன் நின்று நோக்கின அளவிலே; நீள்கடல் பிறந்த கோலக் கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிருள் உடைந்ததேபோல் - பெருங் கடலிலே தோன்றிய அழகிய வெங்கதிரையுடைய ஞாயிறு எதிர்ப்படக்கரிய இருள் நீங்கியது போல; உடம்பிடை நஞ்சு நீங்கிற்று - உடம்பிலிருந்து நஞ்சு விலகியது; ஒண்தொடி உருவம் ஆர்ந்து - பின்னர் அக் கதிர் வளையாளின் உருவத்தைக் கண்ணால் அவன் நுகராநிற்க; குடங்கையின் நெடிய கண்ணால் குமரன்மேல் நோக்கினாள் - அவளும் உள்ளங்கை போன்ற நீண்ட கண்களாற் சீவகனை நோக்கினாள்.
|
|
(வி - ம்.) ஆர்ந்து - ஆர; எச்சத் திரிபு.
|
|
நெடுந்தகை : சீவகன்; நின்று மந்திரமோதி நோக்க என்பது கருத்து. நீள்கடற்பிறந்த கோலக்கடுங் கதிர்க்கனலி என்றது ஞாயிற்று மண்டிலத்தை. இவ்வுவமையடைகள் சீவகன் குடிப்பிறப்பு அழகு ஒளி முதலியவற்றை விளக்கி நின்றன. காரிருள், நஞ்சிற்குவமை. அப்பேரழகினை நோக்கற்கேற்ற கண்ணையுடையாள் என்பார் நெடிய கண்ணால் நோக்கினாள் என விதந்தார்.
|
( 125 ) |
| 1291 |
நோக்கினா ணிறையு நாணு |
| |
மாமையுங் கவினு நொய்திற் |
| |
போக்கினாள் வளையும் போர்த்தாள் |
| |
பொன்னிறப் பசலை மூழ்கிற் |
| |
றாக்கினா ளநங்க னப்புத் |
| |
தூணியை யமரு ளானா |
| |
தோக்கிய முருக னெஃக |
| |
மோரிரண் டனைய கண்ணாள். |
|