| பதுமையார் இலம்பகம் |
737 |
|
| 1293 |
மாழ்கி வெய்துயிர்த் தாண்மட வாளெனத் |
| |
தோழி மார்களுந் தாயருந் தொக்குடன் |
| |
சூழி யானையன் னாய்தொடி னஞ்சறும் |
| |
வாழி யென்றனர் வம்பலர் கோதையார். |
|
|
(இ - ள்.) மடவாள் மாழ்கி வெய்து உயிர்த்தாள் என - பதுமை மயங்கிப் பெருமூச்செறிந்தாள், இனி, இது வேட்கையென்றறிந்து; வம்பு அலர் கோதையார் தோழிமார்களும் தாயரும் உடன்தொக்கு - மணம் விரிந்த மாலையராகிய தோழியரும் செவிலியரும் சேரத்திரண்டு; சூழி யானை அன்னாய்! வாழி! தொடின் நஞ்சு அறும் என்றனர் - முகபடாம் அணிந்த யானை போன்றவனே! வாழ்வாயாக! நீ தீண்டித் தீர்ப்பாயாயின் நஞ்சு நீங்கும் என்றனர்.
|
|
(வி - ம்.) 'அன்னான்' என்னும் பெயர் 'தொழிலிற் கூறும் ஆன் என் இறுதி' யின் கூறாய் ஆய் ஏற்றது : (தொல். விளி. 16)
|
( 128 ) |
| 1294 |
கண்ணிற் காணினுங் கட்டுரை கேட்பினு |
| |
நண்ணித் தீண்டினு நல்லுயிர் நிற்குமென் |
| |
றெண்ணி யேந்திழை தன்னை யுடம்பெலாந் |
| |
தண்ணென் சாந்தம்வைத் தாலொப்பத் தைவந்தான். |
|
|
(இ - ள்.) கண்ணின் காணினும் - (தான் காதலித்தோரைக்) கண்ணாற் கண்டாலும்; கட்டுரை கேட்பினும் - அவருடைய புனைந்துரையைக் கேட்டாலும்; நண்ணித் தீண்டினும் - நெருங்கியத் தொட்டாலும்; நல்உயிர் நிற்கும் என்று எண்ணி - சிறந்த உயிர்நிலைக்கும் என்று நினைத்து; ஏந்து இழை தன்னை - பதுமையை; தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப - குளிர்ந்த சந்தனம் பூசினாற்போல; உடம்பு எலாம் தைவந்தான் - உடம்பு முற்றும் தடவிக் கொடுத்தான்.
|
|
(வி - ம்.) காதலித்தோரைக் காணினும் அவர் சொற்கேட்பினும் அவரைத் தீண்டினும் உயிர் நிற்கும் என்பதனை தன்னனுபவத்தாலுணர்ந்து அவள் உயிர் நிற்கும்பொருட்டும் தன்னுயிர் நிற்கும் பொருட்டும் அவளைத் தைவந்தான் என்பது கருத்து.
|
( 129 ) |
| 1295 |
மற்ற மாதர்தன் வாட்டடங் கண்களா |
| |
லுற்ற நோக்க முறாததொர் நோக்கினிற் |
| |
சுற்றி வள்ளலைச் சோர்வின்றி யாத்திட்டா |
| |
ளற்ற மில்லமிர் தாகிய வஞ்சொலாள். |
|
|
(இ - ள்.) அற்றம் இல் அமிர்து ஆகிய அம்சொலாள் - ஒருவன் கைப்படா அமிர்தாகிய அழகிய மொழியினாள்; மாதர்
|