பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 74 

128 செம்பொற் கண்ணி சிறார்களைந் திட்டவு
மம்பொன் மாலை யவிழ்ந்துடன் வீழ்ந்தவுந்
தம்பொன் மேனி திமிர்ந்ததண் சாந்தமும்
வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ.

   (இ - ள்.) தம் அம்பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும் - (மகளிர்) தம் அழகிய பொன்மாலை கூந்தலவிழ்ந்து சோர்வதினால் வீழ்ந்தவும்; பொன்மேனி திமிர்ந்த தண் சாந்தமும் - அழகிய மெய்யிலே திமிர்ந்த குளிர்ந்த சந்தனமும்; செம்பொன் கண்ணி சிறார் களைந் திட்டவும்-சிறுவர்களைந்திட்ட செம்பொன் கண்ணியும்; வம்புஉண் கோதையர் மாற்றும் மயல் - சேடியர் மாற்றும் குப்பைகள்.

 

   (வி - ம்.) ஏவற் சிலதியர் என்பது தோன்ற 'வம்புஉண் கோதையர்' என்றார். வம்பு - புதுமை. புதுமையை நுகர்ந்து கழித்த மாலையையுடையர் என்பது கருத்து. எனவே, சிலதியர் என்பதாயிற்று. இதனோடு,

 

   ”கொடுப்போர் வீழ்த்த குங்குமக் குழையலும், தொடுப்போர் வீழ்த்த தூவெள்ளலரும்,..........வேள்விச் சமிதையும் .......... வாசச் சுண்ணமும்........ கலவைச் சாந்தமும் . . . . . . புதுப் பூமாலையும் . . . . . . . சிறாஅர் வீழ்த்த செம்பொற் கண்ணியும் . . . . . காட்டு (மயல்) எனக் கமர்ந்து கூட்டுநர்” (2.2 : 92- 102) எனவரும் பெருங்கதைப் பகுதியை ஒப்புக் காண்க. ”கண்டுகை விட்ட மயல்” (நாலடி. 43) என்றார் பிறரும்.

( 99 )
129 வேரி யின்மெழுக் கார்ந்தமென் பூநிலத்
தாரி யாகவஞ் சாந்தத் தளித்தபின்
வாரி நித்திலம் வைப்பபொற் பூவொடு
சேரி தோறிது செல்வத் தியற்கையே.

   (இ - ள்.) இன்மெழுக்கு ஆர்ந்த வேரி - நாற்றமும் தோற்றமும் இனியவற்றால் மெழுகிய மெழுக்கு ஆர்ந்த மணத்தையுடைய; மென்பூ நிலத்து - மென்மையான பூநிலத்திலே; ஆரிஆக அம் சாந்தம் தளித்தபின் - அழகாகத் தொழில்படச் சாந்தைப் பூசிய பின்பு; பொன் பூவொடு வாரி நித்திலம் வைப்ப - பொற்பூவுடன் கடல் முத்தையும் வைப்பார்கள்; சேரிதோறு இது செல்வத்து இயற்கை - சேரிதோறும் செல்வத்தின் இயற்கை, இத்தன்மைத்து.

 

   (வி - ம்.) அரி - ஐம்மை; 'அரி' 'ஆரி' என்றாயது விகாரம். ஆரி - அழகென்றுமாம். ஆரியாக - மேலாக என்றுமாம். மேலும், 'தளித்த சுண்ணம்' (சீவக . 1330) என்ப. வேரி - இருவேரி; வெட்டிவேர்.

( 100 )
130 கருனை வாசமுங் காரிருங் கூந்தலா
ரருமை சான்ற வகிற்புகை வாசமுஞ்
செருமிச் சேந்துகண் ணீர்வரத் தேம்பொழி
லுரிமை கொண்டன வொண்புற வென்பவே.