| பதுமையார் இலம்பகம் | 
746  | 
  | 
| 
    பதுமப்பாயல்மேல். மைவரை மைந்தன் - மலையிலுறைகின்ற முருகன். நிணந்து - பிணைத்து. ”கட்டில் நிணக்கும் இழிசினன்” (புறநா. 82-3) என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. அணங்கு - ஈண்டு இல்லுறை தெய்வம். 
 | 
( 146 ) | 
|  1312 | 
கடைகந் தன்னதன் காமரு வீங்குதோ |  
|   | 
ளடையப் புல்லினன் போன்றணி வெம்முலை |  
|   | 
யுடைய வாகத் துறுதுயர் மீட்டவ |  
|   | 
ளிடைய தாகுமெ னாருமி லாவியே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆரும் இல் என் ஆவி - போகாமல் நிறுத்துவார் இல்லாத என் உயிர்; கடை கந்து அன்ன - கடைந்து செய்த தூண் போன்ற; தன் காமரு வீங்கு தோள் - தன் அழகிய பருத்த தோள்களால்; அடையப் புல்லினன் போன்று - என் மெய்ம் முழுதும் தழுவினவன் போல; ஆகத்து அணி வெம்முலை உறு துயர் உடைய மீட்டவன் - மார்பில் அணிந்த வெம்முலை உற்ற பசப்பு உடையும்படி தடவி மீட்டவனின்; இடையது ஆகும் - இடத்தில் உள்ளதாகும். 
 | 
| 
    (வி - ம்.) கடைகந்து : வினைத்தொகை. காமரு - அழகிய; ஆகத்து அணி வெம்முலை உறுதுயர் உடைய மீட்டவன் என மாறுக. ஆருமில் ஆவி - உயக்கொள்வோர் ஒருவருமில்லாததாகிய உயிர். 
 | 
( 147 ) | 
|  1313 | 
இறுதி யில்லமிர் தெய்துந ரீண்டியன் |  
|   | 
றறிவி னாடிய வம்மலை மத்தமா |  
|   | 
நெறியி னின்று கடைந்திடப் பட்டநீர் |  
|   | 
மறுகு மாக்கடல் போன்றதென் னெஞ்சமே | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி - சாதல் இல்லாமைக்குக் காரணமான அமிர்தத்தைப் பெற விரும்பிய தேவர்கள் திரண்டு; அறிவின் நாடிய - தம் அறிவினாலே அதனை ஆராய வேண்டி; அன்று அம்மலை மத்தமா நின்று - அக் காலத்தில் மந்தரமலை மத்தாக நின்று; நெறியின் கடைந்திடப்பட்ட நீர் மறுகும் மாக்கடல் போன்றது - முறைமையாகக் கடைந்திடப்பட்ட நீர் கலங்குங் கடல் போன்றதாகும்; என் நெஞ்சம் - என் உள்ளம். 
 | 
| 
    (வி - ம்.) எய்துநர் : பெயர் 
 | 
| 
    இறுதி - சாக்காடு. சாக்காடின்மைக்குக் காரணமான அமிர்து என்க. அம்மலை : உலகறிசுட்டு. மந்தரம் - மத்தம் : கடைகழி. 
 | 
( 148 ) | 
|  1314 | 
நகைவெண் டிங்களு நார்மட லன்றிலுந் |  
|   | 
தகைவெள் ளேற்றணற் றாழ்மணி யோசையும் |  
|   | 
பகைகொண் மாலையும் பையுள்செ யாம்பலும் |  
|   | 
புகையில் பொங்கழல் போற்சுடு கின்றவே | 
 
 
 |