பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 749 

   (வி - ம்.) வேந்தன் காய்தல் முன்னர்ப் பதுமையைப் பாம்பு தீண்டிய பொழிலிலே போகவிட்டது கருதி. காயினுஞ் செல்வேம் என்று துணிந்தனர். அங்கே சீவகனைக் கண்ட இடங்கண்டு ஆறுதல் பெறக்கூடும் என்று கருதி.

   நச்சினார்க்கினியர் (151) முதல் (153) வரை மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு :

   ”நுண்ணிடையாள் அழுது நையாநிற்கத், தாயும் தோழியும் எண்ணி, அவனை எதிர்ப்பட்ட இடங்காணினும் அவனைக் கண்ட இடங்கண்டாலும் அவனை எதிர்ப்பட்டாற் போறலின், வேந்து காயினும் பொழிலிலே சென்று விளையாடுதலே காரியம் என்று கருதி, அவளைக் கொம்பனையார் அணிந்த பின்பு கோதையையுங் கண்ணியையும் சூட்டினார்; சூட்டி அப் பொழிலிலே போ என்று கூற, ஆயமும் திரண்டு தொழுது கூடப் போந்தது; பொழிலும் பொலிந்தது.

   'அழுது' என்பதற்குப் பாம்பு கடித்தவிடத்தே போகவிடா நின்றோம் என்று அழுதார் என்றும் உரைப்ப.”

( 153 )
1319 அலங்க றான்றொடுப் பாரலர் பூக்கொய்வார்
சிலம்பு சென்றெதிர் கூவுநர் செய்சுனை
கலங்கப் பாய்ந்துட னாடுநர் காதலி
னிலங்கு பாவை யிருமணஞ் சோ்த்துவார்

   (இ - ள்.) அலங்கல் தான் தொடுப்பார் - (அவ்வாயத்தார்) மாலை தொடுப்பார்கள்; அலர்பூக் கொய்வார் - அலர்ந்த மலர்களைக் கொய்வார்கள்; சிலம்பு சென்று எதிர் கூவுநர் - செய் குன்றோரஞ்சென்று எதிரொலி பிறக்கக் கூவுவார்கள்; செய்சுனை கலங்கப் பாய்ந்து உடன் ஆடுநர் - செயற்கைச் சுனையிலே அது கலங்குமாறு பாய்ந்து ஒருங்கே ஆடுவார்கள்; காதலின் இலங்கு பாவை இருமணம் சேர்த்துவார் - காதலுடன் விளங்கும் பதுமைகளைப் பெருமையாக மணம் புரிவிப்பார்கள்.

   (வி - ம்.) அலங்கல் - மாலை. தான் : அசை. அலர்பூ : வினைத்தொகை. சிலம்பு - ஈண்டுச் செய்குன்று. கூவுநர் - கூவுவார் . ஆடுநர் - ஆடுவார். பாவை - விளையாட்டுப் பொம்மை.

( 154 )
1320 தூசு லாநெடுந் தோகையி னல்லவ
ரூச லாடுந ரொண்கழங் காடுநர்
பாச மாகிய பந்துகொண் டாடுந
ராகி யெத்திசை யும்மமர்ந் தார்களே.

   (இ - ள்.) தூசு உலாம் நெடுந்தோகையின் நல்லவர் - ஆடையிலே அசைகின்ற கொய்சகத்தையுடைய அவ்வாயத்தார்; ஊசல் ஆடுநர் - ஊசல் ஆடுவர்; ஒண்கழங்கு ஆடுநர் - ஒளிரும் கழங்கு விளையாடுவர்; பாசம் ஆகிய பந்து கொண்டு