நாமகள் இலம்பகம் |
75 |
|
(இ - ள்.) கருனை வாசமும் கார்இருங் கூந்தலார் அருமை சான்ற அகிற்புகை வாசமும் - பொரிக் கறியினது மணிமிகு புகையும் , கரிய நீண்ட கூந்தலில் ஆர்ந்த அருமைமிகும் அகிலின் மணப்புகையும்; செருமிச் சேந்து கண்ணீர்வர - நெருங்கிச் சிவந்து கண்ணீர் வருதலாலே; ஒண்புறவு தேம்பொழில் உரிமை கொண்ட - சிறந்த புறாக்கள் பொழிலைத் தம் இருக்கையாகக் கொண்டன.
|
|
(வி - ம்.) கூந்தலில் ஆர்புகை : வினைத்தொகை. கூந்தலார் : பெயருமாம்.
|
|
கருனை - பொரிக்கறி. வாசம் : மணம் . இஃது ஆகுபெயராய் மணமுடைய புகையைக் குறித்தது. அகிற்புகை வாசமும் என்புழி அகில் வாசப்புகையும் என மாறுக. மாடத்தைவிட்டுத் தேம்பொழில் உரிமை கொண்டன என்பது கருத்து.
|
( 101 ) |
131 |
நறையு நானமு நாறு நறும்புகை |
|
விறகின் வெள்ளிய யடுப்பினம் பொற்கல |
|
நிறைய வாக்கிய நெய்பயில் இன்னமு |
|
துறையு மாந்தர் விருந்தொடு முண்பவே. |
|
(இ - ள்.) வெள்ளி அடுப்பின் - வெள்ளி அடுப்பிலே; நறையும் நானமும் நாறும் நறும்புகை விறகின் - நறைக்கொடியும் தூவியெரிக்கும் புழுகும் மணக்கும் நல்ல மணமுறு விறகினாலே; அம்பொன்கலம் நிறைய ஆக்கிய நெய் பயில் இன்னமுது - அழகிய பொற்கலத்திலே நிறையச் சமைத்த நெய்கலந்த இனிய சோற்றை; உறையும் மாந்தர் விருந்தொடும் உண்ப - அங்கு வாழும் மக்கள் விருந்தொடும் உண்பார்கள்
|
|
(வி - ம்.) விறகு - சந்தனம் முதலியன.
|
|
விருந்தோடுண்டலே அழகு ஆதலின் மாந்தர் விருந்தொடும் உண்பவே என்றார். எனவே, தம்மில்லிருந்து தாமே உண்டு தம் விலாப்புடைக்கும் புன்செல்வர் ஆண்டிலர் என்பது குறிப்பு ஆயிற்று.
|
( 102 ) |
132 |
பாளை மென்கமு கின்பழ மெல்லிலை |
|
நீள்வெண் மாடத்து நின்றுகொண் டந்நலா |
|
ராளி மொய்ம்பர்க் களித்தணி சண்பக |
|
நாள்செய் மாலை நகைமுடிப் பெய்பவே. |
|
(இ - ள்.) அம்நலார் நீள்வெண் மாடத்து நின்றுகொண்டு - அழகிய மகளிர் நீண்ட வெண்மையான மாடத்திலே நின்று கொண்டு; மென்கமுகின் பாளைப்பழம் - மெல்லிய கமுகம் பாளையிலிருந்த பாக்கையும்; மெல்லிலை - வெற்றிலையையும்; ஆளி மொய்ம்பர்க்கு அளித்து - (பறித்துக்கொண்டு) ஆளியனைய வலிய ஆட
|
|