| பதுமையார் இலம்பகம் | 
750  | 
  | 
| 
 ஆடுநர் - அன்புடைய பந்தைக் கொண்டு ஆடுவர்; ஆகி - ஆகி; எத்திசையும் அமர்ந்தார்கள் - எல்லாம் பக்கத்தினும் போய் அமர்ந்தனர். 
 | 
| 
    (வி - ம்.) நச்சினார்க்கினியர் இவ்விரு செய்யுட்களையும் ஒரு தொடராக்குவர். 
 | 
| 
    தூசுலா நெடுந்தோகை என்றது, புடைவையிலே அசைகின்ற கொய் சகத்தை; தோகை போறலின் அஃதப்பெயர் பெற்றது. பாசமாகிய பந்து தம்பற்றிற்குக் காரணமாகிய பந்து என்க. 
 | 
( 155 ) | 
|  1321 | 
முருகு விம்மிய மொய்குழ லேழைத |  
|   | 
னுருகு நோக்க முளங்கிழித் துள்சுட |  
|   | 
வரிவை யாடிய காவகங் காணிய |  
|   | 
வெரிகொள் வேலவ னேகின னென்பவே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) முருகு விம்மிய மொய்குழல் ஏழைதன் - மணம் ததும்பிய நெருங்கிய குழலையுடைய பதுமையின்; உருகும் நோக்கம் உளம் கிழித்து உளசுட - தன் நினைவு மிக்கு வருந்திப் பார்த்த பார்வை உள்ளத்தைப் பிளந்து சுடுதலின்; அரிவை ஆடிய காவகம் காணிய - பதுமை ஆடிய பொழிலைக் காண்பதற்கு; எரிகொள் வேலவன் ஏகினன் என்ப - அனல் ததும்பிய வேலினையுடைய சீவகன் சென்றான். 
 | 
| 
    (வி - ம்.) என்ப : அசை. அவளாடிய இடத்தைக் காண்டலும் அவளைக் காண்பதுபோல இருத்தலின் ஏகினன். 
 | 
| 
    முருகு - மணம். மொய்குழலேழை : பதுமை; பன்மொழித் தொடர். அரிவை : பதுமை. காணிய - காண : செய்யியவென் வாய்பாட்டெச்சம். வேலவன் : சீவகன். 
 | 
( 156 ) | 
|  1322 | 
மயிலி னாடலு மந்தியி னூடலுங் |  
|   | 
குயிலின் பாடலுங் கூடி மலிந்தவண் |  
|   | 
வெயிலி னீங்கிய வெண்மணற் றண்ணிழல் |  
|   | 
பயிலு மாதவிப் பந்தரொன் றெய்தினான் | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மயிலின் ஆடலும் - மயிலின் ஆட்டமும்; மந்தியின் ஊடலும் - பெண் குரங்கின் பிணக்கும; குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண் - குயிலின் பாட்டும் கூடி நிறைந்த அப்பொழிலிலே; வெயிலின் நீங்கிய வெண்மணல் தண்ணிழல் - வெயிலினின்றும் நீங்கிய வெண்மையான மணல் பரவிய தண்ணிய நிழலுறும்; மாதவிப் பந்தர் ஒன்று எய்தினான் - மாதவிப் பந்தர் ஒன்றை அடைந்தான். 
 | 
| 
    (வி - ம்.) மந்தி - பெண்குரங்கு. மாதவிப்பந்தர் - குருக்கத்திக் கொடி படர்ந்து பந்தரிட்ட இடம். 
 | 
( 157 ) |