| பதுமையார் இலம்பகம் | 
752  | 
  | 
| 
    (இ - ள்.) கறந்த பாலினுள் காசு இல் திருமணி - கறந்து வைத்த பாலிலே குற்றமற்ற நீலமணி; நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டாங்கு - நிறம் கிளர அது தன் இயல்பு கெட்டாற் போல; அவள் மறைந்த மாதவி மாமை நிழற்றலின் - பதுமை மறைந்து நின்ற மாதவிப் பூவின் மேலே அவளுடைய மாமை நிறம் ஒளிவிடுதலின்; சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான் - சிறப்புற்ற செல்வனும் தன் மனம் பொருந்த நோக்கினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) மாமை: 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் நாருரித் தன்ன மதனின் மாமை' (நற். 6:1-2) என்பதனால் அறிக. மாதவி : மலருக்கு ஆகுபெயர். இவ்வொளி யாதென்று கருதினான். 
 | 
( 160 ) | 
|  1326 | 
வரையின் மங்கைகொல் வாங்கிருந் தூங்குநீர்த் |  
|   | 
திரையின் செல்விகோ றேமலர்ப் பாவைகொ |  
|   | 
லுரையின் சாய லியக்கிகொல் யார்கொலிவ் |  
|   | 
விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே | 
 
 
 | 
| 
    (இ - ள்.) இவ் விரைசெய் கோலத்து வெள்வளைத்தோளி - இந்த மணங்கமழும் ஒப்பனையுடைய வளைத்தோளினாள்; வரையின் மங்கைகொல்? - மலையர மகளோ?; வாங்கு இருந்தூங்கு நீர்த்திரையின் செல்விகொல்? - வளைந்த பெரிய அசையும் நீரையுடைய கடலில் வாழும் அரமங்கையோ?; தேன்மலர்ப் பாவை கொல்? - தேனையுடைய தாமரையில் வாழும் திருமளோ?; உரைஇன் சாயல் இயக்கி கொல்? - புகழப்பெறும் இனிய மென்மையையுடைய இயக்கியோ?; யார்கொல் - யாவளோ? 
 | 
  | 
| 
    (வி - ம்.) பதுமையை முன்பு கண்டவனாயினும் வேட்கை மிகுதியால் ஐயம் நிகழ்ந்தது. 
 | 
  | 
| 
    வாங்குநீர் இருந்தூங்கு நீர் எனத் தனித்தனி கூட்டுக. வாங்கு - உலகினை வளைந்த. இருந்தூங்கு நீர் - பெரிய அசைகின்ற நீர். 
 | 
( 161 ) | 
|  1327 | 
மாலை வாடின வாட்க ணிமைத்தன |  
|   | 
காலும் பூமியைத் தோய்ந்தன காரிகைப் |  
|   | 
பாலின் தீஞ்சொற் பதுமையிந் நின்றவள் |  
|   | 
சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மாலை வாடின - மாலைகள் வாடியுள்ளன; வாள் கண் இமைத்தன - வாளனைய கண்கள் இமைக்கின்றன; காலும் பூமியைத் தோய்ந்தன - கால்களும் நிலமிசைத் தோய்கின்றன; இந் நின்றவள் பால்இன் தீசொல் - (ஆகையால்) இங்கே நின்கின்றவள் பாலனைய இனிய மொழியாளாகிய; சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளி பதுமையே - பொழிலில் உள்ள மூங்கிலை மயக்கும் வளைசூழ்ந்த தோளியாளாகிய பதுமையே. 
 | 
  |