| பதுமையார் இலம்பகம் |
753 |
|
|
(வி - ம்.) 'தோளியே' என்பதன் ஈற்றிலுள்ள ஏகாரத்தைப் பதுமையின் ஈற்றிற் சேர்க்க. மருள் : உவம உருபு.
|
( 162 ) |
| 1328 |
தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை |
| |
மேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலிற் |
| |
கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள் |
| |
பூவர் சோலை புகுவலென் றெண்ணினான். |
|
|
(இ - ள்.) தீ தொடைத் தேவர் பண்ணிய இன்சுவை - இனிய யாழினையுடைய கந்தருவர் அமைத்த இனியமணம்; மேவர்தென் தமிழ் மெய்ப்பொருள் ஆதலின் - பொருந்திய தமிழகப் பொருளில் முதற் கந்தருவமான உண்மை மணமாகும் ஆதலினால்; கோவத்து அன்னமென் சீறடிக் கொம்பனாள் பூவர் சோலை - இந்திரகோபம் போன்ற மென்மையான சிற்றடியுடைய மலர்க்கொம்பனாள் நிற்கின்ற மலர் பொருந்திய பொழிலிலே; புகுவல் என்று எண்ணினான் - யானும் சென்று இயற்கைப் புணர்ச்சியில் ஈடுபடுவேன் என்று எண்ணினான்.
|
|
|
(வி - ம்.) முதற் கந்தவரும்: நாடக வழக்கானது. இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்படாமல் வருவது. ஈண்டுக் கூறியது சுட்டியொருவர் பெயர் கொள்ளப்படுவதால் இரண்டாங் கந்தருவமான உலகியல் வழக்காகும் மெய்ப்பொருள் என்றார் இதனை. இது ஐந்து நிலம் பெற்றது. ' தீந்தொடைத் தேவர்' என்று இயைக்க. பூவர் : அர் : பகுதிப் பொருள் விகுதி என்பர் நச்சினார்க்கினியர். முதற் கந்தருவம் அன்மையின் எண்ணினான் என்றார்.
|
( 163 ) |
| 1329 |
அல்லி சேரணங் கன்னவட் காயிடைப் |
| |
புல்லி நின்றமெய்ந் நாண்புறப் பட்டது |
| |
கல்செய் தோளவன் காமரு பேருணர் |
| |
வெல்லை நீங்கிற் றியைந்தன ரென்பவே. |
|
|
(இ - ள்.) அல்லிசேர் அணங்கு அன்னவட்கு - தாமரை மலர்த் திருவனையாட்கு ; ஆயிடைப் புல்லி நின்ற மெய்ந்நாண் புறப்பட்டது - அவன் அங்ஙனம் எண்ணிச் சென்ற பொழுது பொருந்தி நின்ற மெய்ந்நாணம் நீங்கியது - கல்செய் தோளவன் காமரு பேர் உணர்வு எல்லை நீங்கிற்று; கல்செய் தோளவன் காமரு பேர் உணர்வு எல்லை நீங்கிற்று - கல்லாலாகியது போன்ற தோளையுடையானின் அழகிய பேரறிவு அவன் எல்லையைக் கடந்தது; இயைந்தனர் - அப்போது இருவரும் கூடினர்.
|
|
|
(வி - ம்.) என்ப, ஏ : அசைகள்.
|
|
|
அல்லி - அகவிதழ்; ஈண்டுத் தாமரை மலர்க்கு ஆகுபெயர். அணங்கு ஈண்டுத் திருமகள்; பதுமைக்குவமை, தோளவன் : சீவகன்.
|
( 164 ) |