| பதுமையார் இலம்பகம் |
755 |
|
|
(இ - ள்.) பொன் - பொன்னனையாய்!; துஞ்சு ஆகத்துப் பூங்கண்கள் போழ்ந்த புண் - நீ தங்கிய மார்பிலே நின் கண்களாகிய வேல்பட்டுப் பிளந்து கிடந்த பழம் புண்களை; இன்று இப் பூண்கொள் இளமுலைச் சாந்து அலால் - இன்று இந்த அணிகலன் தங்கிய இளமுலைகளில் அணிந்த சாந்தல்லது; அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லை - மாறுபட்டுத் தீர்ப்பன வேறொன்றும் இல்லை; என்று மாதர் எழில்நலம் ஏத்தினான் - என்று கூறிப் பதுமையின் அழகுநலத்தைப் போற்றினான்.
|
|
|
(வி - ம்.) இவையிரண்டும் நயப்பு. பொன்: பதுமை; உவமை யாகுபெயர். இனித் தலைவியின் முன்னாதலின் 'திருமகள் துஞ்சும் ஆகம்' எனத் தன்னைப் புகழ்தலும் ஆம். ஆகம்: நெஞ்சு; இடவாகுபெயர்.
|
( 167 ) |
| 1333 |
கண்ணி வேய்ந்து கருங்குழல் கைசெய்து |
| |
வண்ண மாலை நடுச்சிகை யுள்வளைஇச் |
| |
செண்ண வஞ்சிலம் பேறு துகளவித் |
| |
தண்ண லின்புறுத் தாற்றலி னாற்றினாள். |
|
|
(இ - ள்.) கண்ணி வேய்ந்து - மலர்க்கண்ணியைச் சூடி; கருங்குழல் கைசெய்து - கரிய கூந்தலை ஒழுங்காக அணிந்து; வண்ணமாலை நடுச்சிகை உள் வளைஇ - அழகிய மாலையைக் கொண்டையின் நடுவே வளையமாக வைத்து; செண்ணம் அம் சிலம்பு ஏறு துகள் அவித்து - நுண்ணிய தொழிலையுடைய அழகிய சிலம்பிலேறின பூந்துகளைத் துடைத்து; அண்ணல் இன்புறுத்து ஆற்றலின் - சீவகன் இன்பம் ஊட்டி ஆறுதல் செய்தலால்; ஆற்றினாள் - ஆறுதல் கொண்டாள்.
|
|
|
(வி - ம்.) கூட்டத்தின்போது சிலம்பிலே நிலமிசையுதிர்ந்து கிடந்த பூந்துகள் படிந்தது.
|
|
|
கண்ணி - தலையிற் சூடும் மாலை. செண்ணம் - ஒப்பனை; நுண்டொழில் என்பார் நச்சினார்க்கினியர். அண்ணல் : சீவகன்.
|
( 168 ) |
| 1334 |
திங்க ளும்மறு வும்மெனச் சோ்ந்தது |
| |
நங்க ளன்பென நாட்டி வலிப்புறீஇ |
| |
யிங்கொ ளித்திடு வேனும ரெய்தினார் |
| |
கொங்கொ ளிக்குழ லாயெனக் கூறினான். |
|
|
(இ - ள்.) நங்கள் அன்பு திங்களும் மறுவும் எனச் சேர்ந்தது - நம்முடைய அன்பு திங்களும் அதிற் பொருந்திய மறுவும் என்னுமாறு பொருந்தியது; என நாட்டி வலிப்பு உறீஇ - என்று கூறி நாட்டி வலியுறுத்தி; கொங்கு ஒளிக் குழலாய்!- தேன் பொருந்திய கூந்தலாய்!; நுமர் எய்தினார் - உன் ஆயத்தார் வந்து
|
|