பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 756 

விட்டனர் (ஆதலால்); இங்கு ஒளித்திடுவேன் எனக் கூறினான் - இங்கு மறைந்திடுவேன் என்று கூறினான்.

 

   (வி - ம்.) நங்கள் : கள் : அசை. நாட்டி - பிரிவென்பதொன்றுண்டென நிலைபெறுத்தி. வலிப்பு உறீஇ - பிரிந்தும் உளத்தாற் பிரிவிலேமென்று தெளியும்படி நெஞ்சை வற்புறுத்தி. உடன் தேய்ந்து உடன் வளர்தலின் மறு உவமை.

 

   நச்சினார்க்கினியர் இவ்விரண்டு செய்யுளையும் ஒரு தொடராக்கிக் கூறும் முடிபு :

 

   ”அண்ணல் வேய்ந்து, கைசெய்து, துகளவித்து, இன்புறுத்தி, நம் அன்பு சேர்ந்ததென்று கூறி நாட்டி. வலிப்புறீஇ ஆற்றுவித்தலின் ஆற்றினாள்.

 

   ஆற்றின பின்பு, குழலாய்! எய்தினார், ஒளிப்பேன் என்று கூறினான்.”

( 169 )
1335 மழையி டைக்குளித் திட்டதோர் வாண்மினிற்
றழையி டைக்குளித் தான்றகை வேலினா
னிழையி டைக்குளித் தேந்திய வெம்முலை
வழையி டைக்குளித் தார்வந்து தோன்றினார்

   (இ - ள்.) மழையிடைக் குளித்திட்டது ஓர் வாள்மினின் - மழையிடத்தே மறைந்திட்ட ஒரு மின்னைப்போல்; தகை வேலினான் தழையிடைக் குளித்தான் - தகுதியுற்ற வேலினான் கடிதாகத் தழையிடை மறைந்தனன்; இழையிடைக் குளித்து ஏந்திய வெம்முலை - அணிகலனிடையே மறைந்த ஏந்திய விருப்பூட்டும் முலையினாராகிய; வழையிடைக் குளித்தார் வந்து தோன்றினார் - சுரபுன்னை மரங்களினிடையே மறைந்த ஆயத்தார் வந்து தோன்றினர்.

 

   (வி - ம்.) மழை: ஆகுபெயர். மின்னல் - ஈண்டுத் தொழில் பற்றிச் சீவகனுக்கு உவமை. குளித்தான் - மறைந்தவன். வழை - சுரபுன்னைமரம். குளித்தார் - மறைந்தார்; தோழியர்.

( 170 )
1336 மின்னொர் பூம்பொழின் மேதகச் செல்வதொத்
தன்ன நாண வசைந்து சிலம்படி
மென்மெ லம்மலர் மேன்மிதித் தேகினா
ணன்ன லம்மவற் கேவைத்த நங்கையே.

   (இ - ள்.) நல்நலமே அவற்கு வைத்த நங்கை - நல்ல அன்பொன்றுமே அவனுக்குத் துணையாக வைத்த பதுமை; மின்ஒர் பூம்பொழில் மேதகச் செல்வது ஒத்து - மின்னானது ஒரு மலர்ப் பொழிலிலே சிறப்புறச் செல்வதுபோல; சிலம்பு அடி மென்மெலம் மலர்மேல் மிதித்து - சிலம்பணிந்த அடியை மெல்ல மெல்ல மலரின்மேல் எடுத்து வைத்து; அன்னம் நாண அசைந்து ஏகினாள் - அன்னமும் வெள்குற அசைந்து சென்றாள்.