பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 757 

   (வி - ம்.) முற்பிறப்பே தொடங்கி அன்புவைத்தவன் என்றுமாம்.

 

   மின், பதுமைக்கு உவமை. மே - பெருமை. நன்னலம் - சிறந்த அன்பு. அவற்கு : சீவகனுக்கு. நங்கை : பதுமை.

( 171 )
1337 திங்கள் சூழ்ந்தபன் மீனெனச் சென்றெய்தி
நங்கை தவ்வையுந் தோழியு நண்ணினா
ரங்க வாய மடிப்பணி செய்தபின்
றங்கள் காதலி னாற்றகை பாடினார்.

   (இ - ள்.) திங்கள் சூழ்ந்த பல்மீன் எனச் சென்று எய்தி - திங்களைச் சூழ்ந்த பல மீன்கள் என்னுமாறு போய்ச்சேர்ந்து; அங்கு அவ் ஆயம் அடிப்பணி செய்தபின் - அங்கே அந்த ஆயத்தார் குற்றேவல் புரிந்த பிறகு; நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார் - பதுமையின் செவிலியும் தோழியும் அணுகினார்; தங்கள் காதலினால் தகைபாடினார் - (பின்னா) தங்கள் அன்பு மிகுதியால் அவள் நலத்தை எல்லோரும் சேர்ந்து பாராட்டினார்.

 

   (வி - ம்.) தவ்வை : செவிலிக்கு மூத்தவள். பாம்பு தீண்டின பொழிலாதலிற் காவலாக வந்தனர்.

 

   திங்கள் பதுமைக்கும் மீன்கள் தோழியர்க்கும் உவமை. தவ்வை - தாய் ; ஈண்டுச் செவிலி. தகை - அழகு. பாடினார் - பாடிப்பரவினர்.

( 172 )
1338 தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும்
விழைவ சோ்த்துபு மெல்லென வேகினார்
முழையுண் மூரி முழங்கரி யேறனான்
பழைய நண்பனைப் பண்புளி யெய்தினான்

   (இ - ள்.) தழையும் கண்ணியும் தண்நறு மாலையும் - தழை கண்ணி நல்ல மாலை ஆகியவற்றில்; விழைவ சேர்த்துபு - அவள் விரும்புவனவற்றைச் சேர்த்து; மெல்என ஏகினார் - மெல்லக் கொண்டு சென்றனர்; முழையுள் மூரி முழங்கு அரி ஏறனான் - முழையிலே பெருமையுடன் முழங்கும் சிங்கம் போன்ற சீவகனும்; பழைய நண்பனைப் பண்புஉளி எய்தினான் - பழைய நண்பனாகிய உலோகமாபாலனை, அப்பதுமையின் பண்புகளை எண்ணியவாறு அடைந்தான்.

 

   (வி - ம்.) பண்பு : கூட்டத்தின்போது கண்ட குணங்கள்.

 

   விழைவ : வினையாலணையும் பெயர். துசர்த்துபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். சேர்த்துபு - சேர்த்தி. மழை - மலைக்குகை. மூரி - பெருமை. அரியேறு - ஆண் சிங்கம். அன்னான் என்பது அனான் என னகர மெய் குறைந்தது நின்றது. இது தொகுத்தல் விகாரம். அன்னான் - போன்றவன்; இது சீவகனையுணர்த்திற்று. பழைய நண்பன் என்றத உலோகபாலனை - உள்ளி என்பது உளி என இடை குறைந்து நின்றது. உள்ளி - நினைத்து.

( 173 )