பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 758 

வேறு

 
1339 பூமியை யாடற் கொத்த பொறியின னாத லானு
மாமக ளுயிரை மீட்ட வலத்தின னாத லானு
நேமியான் சிறுவ னன்ன நெடுந்தகை நேரு மாயி
னாமவற் கழகி தாக நங்கையைக் கொடுத்து மென்றான்.

   (இ - ள்.) மாமகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும் - பதுமையின் உயிரைத் தந்த வெற்றியை உடையோன் ஆகையாலும்; பூமியை ஆள்தற்கு ஒத்த பொறியினன் ஆதலானும் - உலகினை ஆள்வதற்குரிய நல்லிலக்கணம் உடையனாதலானும்; நேமியான் சிறுவன் அன்ன நெடுந்தகை நேருமாயின் - திருமாலின் மகனான காமனை யொத்த சீவகன் உடன்படுவானாயின்; நாம் அழகிதாக அவற்கு நங்கையைக் கொடுத்தும் என்றான் - நமக்கு நன்றாக நாம் பதுமையை அவனுக்குக் கொடுக்கக் கடவேம் என்று தனபதி மன்னன் கூறினான்.

 

   (வி - ம்.) ஆடற்கு - ஆள்வதற்கு. பொறி நல்லிலக்கணம். மாமகள்: பெருமை மிக்க பதுமை. வலம் - வெற்றி. நேமியான் சிறுவன்: திருமால் மகனான காமன்; சீவகனுக்குவமை. கொடுத்தும் : தன்மைப் பன்மை வினைமுற்று.

( 174 )
1340 மதிதர னென்னு மாசின் மந்திர சொல்லக் கேட்டே
யுதிதர வுணர்வல் யானு மொப்பினு முருவி னானும்
விதிதர வந்த தொன்றே விளங்குபூண் முலையி னாளைக்
கொதிதரு வேலி னாற்கே கொடுப்பது கரும மென்றான்

   (இ - ள்.) சொல்லக் கேட்டு - அவ்வாறு அரசன் கூறக்கேட்டு; மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி - மதிதரன் எனும் பெயரை யுடைய குற்றம் அற்ற அமைச்சன்; ஒப்பினும் உருவினானும் - ஒப்பினாலும் உருவுடைமையாலும்; விதிதர வந்தது ஒன்றே - ஊழ்தர வந்தது ஒன்றாம்; விளங்குபூண் முலையினாளைக் கொதிதரு வேலினாற்கே கொடுப்பது கருமமம் - விளங்கும் அணியணிந்த முலையாளைக் கொதியிட்ட வேலினானுக்கே கொடுப்பது கடமை; யானும் உதிதர உணர்வல் என்றான் - யானும் என் உணர்வில் தோன்ற முன்னரே உணர்ந்தேன் என்றான்.

 

   (வி - ம்.) பதுமையும் சீவகனும் மணப்பதற்கு ஒப்பானும் உருவானும் ஊழ் கூட்டுவித்தது என்று மந்திரி கூறினான். உரு - அழகு. ஒப்பு : அரசகுடும்பமாதல் முதலான ஒப்புமை. 'பொறி' என முற்செய்யுளில் வந்ததுகாண்க. இனி, 'உரு உட்காகும்' எனக்கொண்டு, 'பதுமைக்குற்ற நஞ்சை நீக்கினாற்குப் பதுமையைக் கொடுப்பதாக முரசறைந்ததை மாற்றக் கூடாது என்னும் அச்சம்' என்பர் நச்சினார்க்கினியர். அது பொருந்துமேற் கொள்க. ஒப்பு ”பிறப்பே குடிமை ஆண்மை ஆண்