| நாமகள் இலம்பகம் |
76 |
|
|
வர்கட்குக் கொடுத்து; அணி சண்பகம் நாள்செய் மாலை நகை முடிப் பெய்ப - (அவர்கள்) அணிந்த சண்பகத்தின் புதிய மலர் மாலையை வாங்கித் தம் முத்துமாலை சூடிய முடியிலே பெய்வார்கள்.
|
|
|
(வி - ம்.) 'ஆளி மொய்ம்பர் அணிந்திருந்த சண்பகமாலையை வாங்கி நாட்கால மன்றாயினும் வேட்கை மிகுதியால் தமது முடியிலே பெய்வர், இனி, நாட்காலத்தே செய்த செண்பகமாலை அணிந்த முடியிலே அக்காலத்திற்குரிய பூக்களைப் பெய்வர் என்றுமாம்' என்று கூறுவர் நச்சினார்க்கினியர்.
|
|
|
மணம் மெல்லிய பாளை. வெள்ளிலை பாடமாயின், கொம்பிலே வெளுத்ததாம். நகைமுடி - முத்தமாலை சூடிய முடி.
|
( 103 ) |
| 133 |
எழுது வாணெடுங் கண்ணிணை யந்நலார் |
| |
மெழுகு குங்கும மார்பிடை வெம்முலை |
| |
யுழுது கோதையுஞ் சாந்து முவந்தவை |
| |
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. |
|
|
(இ - ள்.) எழுதுவாள் நெடுங் கண்இணை அம்நலார் - மை எழுதிய வாளனைய நெடுங் கண்களையுடைய மகளிர்; குங்குமம் மெழுகும் மார்பிடை - கணவருடைய குங்குமம் மெழுகிய மார்பிலே; வெம்முலை உழுது கோதையும் சாந்தும் வித்தித் திளைப்ப - வெம்முலையாலே உழுது கோதையையும் சாந்தையும் விரைத்துத் திளைப்பவனற்றில்; உவந்தவை முழுதும் விளைப்பர் - தாம் விரும்பியவற்றையெல்லாம் விளைப்பார்கள்.
|
|
|
(வி - ம்.) திளைப்பன : (கலவிக்) கரணங்கள்.
|
( 104 ) |
| 134 |
குஞ்சி மேலனிச் சம்மலர் கூட்டுணு |
| |
மஞ்சி லோதிய ரம்மலர்ச் சீறடி |
| |
மஞ்சு தோய்மணி மாடத்து மல்குபூம் |
| |
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. |
|
|
(இ - ள்.) அனிச்சம் மலர் கூட்டுணும் அம்சில் ஓதியர் அம்மலர்ச் சீறடி - அனிச்ச மலரின் மென்மையைக் கொள்ளை கொண்ட அழகிய சிலவகையான கூந்தலையுடைய மகளிரின் அழகிய மலரனைய சிற்றடி; மஞ்சுதோய் மணிமாடத்து - முகில் தவழும் மணிகளிழைத்த மாடங்களிலே; குஞ்சிமேல் பனிக்கும் - கணவருடைய சிகையின்மேலும் நடுங்கும்; மல்கும் பூம்பஞ்சி மேலும் பனிக்கும் - நிறைந்த அழகிய பஞ்சிமேலும் நடுங்கும்.
|
|
|
(வி - ம்.) கோபத்தாலும் கரணத்தாலும் நடுங்கிற்றென ஊடலும் கூடலும் உணர்த்திற்று; 'கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று' (பதிற்.52) என்றார் பிறரும். நகராதலின் ஊடற்குக் காரணங் கூறா
|
|