பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 760 

   (இ - ள்.) பொன்றிய உயிரை மீட்டான் - நீங்கற் கிருந்த உயிரை மீட்டான்; பூஞ்சிகைப் போது வேய்ந்தான் - அழகிய கூந்தலிலே மலரணிந்தான்; அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் - மேலும், பதுமையின் மெய்யினைத் தொட்டு அளி செய்தான்; அழகின் மிக்கான் - அழகினும் மேம்பட்டவன்; ஒன்றிய மகளிர்தாமே உற்றவர்க்குரியர் என்னா - பொருந்திய மகளிர் தாங்கள் தங்களை உற்றவர்க்கே உரியவர் என்று; வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே! - வெற்றியுடைய வேலினானுக்கே அத்தன்மையும் விளைந்தது அல்லவா?

 

   (வி - ம்.) 'உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்' (சிற்ற - 225. பேர் - மேற்.)

 

   பொன்றிய உயிர் என்றது இறத்தற்கிருந்த உயிர் என்றவாறு. சிகையிற் போது வேய்ந்தான் என்க. மாமெய்யும் எனவேண்டிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தான் தொக்கது.

( 177 )
 

   (இ - ள்.) இவைகள் கோப்பெருந் தேவி கொற்றக் கோமகன் நாடி - இவற்றைத் தனபதியும் திலோத்தமையும் உலோகபாலனும் தம்மிற் கூடி ஆராய்ந்து; இன்றே ஐயற்கு நங்கையை யாப்பு உடைத்து - இன்றைக்கே சீவனுக்குப் பதுமையை நல்கும் பொருத்தம் உளது; அமைக்க என்ன - (நீவிர் மணத்திற்கு வேண்டுவன) அமையுங்கோள் என்று பணியாளரை ஏவ; தூப் புரி முத்தமாலை தொடக்கொடு எங்கும் தூக்கி - தூய வடமான முத்தமாலையைச் சல்லியுந் தூக்குமாக எங்கும் நாற்றி; பூப்புரிந்து அணிந்து - பூவை விரும்பி அணிந்து; கோயில் புதுவது புனைந்தது - ஒரு கோயில் புதுவதாகப் புனையப்பட்டது.

 

   (வி - ம்.) கோ : தனபதி. பெருந்தேவி - ஈண்டுத் திலோத்தமை. கோமகன் : உலோகபாலன். கோவும் தேவியும் மகனும் என உம்மை விரிக்க. ஐயற்கு : சீவகனுக்கு. கோயில் புதுவழி புனைந்து - அரண்மனை புதியதாக அலங்கரிக்கப்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம்.

( 178 )