| பதுமையார் இலம்பகம் |
762 |
|
வேறு
|
|
| 1346 |
கயற்க ணாளையுங் காமனன் னானையு. |
| |
மியற்றி னார்மண மேத்தருந் தன்மையார் |
| |
மயற்கை யில்லவர் மன்றலின் மன்னிய |
| |
வியற்கை யன்புடை யாரியைந் தார்களே. |
|
|
(இ - ள்.) ஏத்த அருந் தன்மையார் - புகழ்தற்கரிய தன்மையுடையார் ஆகிய தனபதி முதலாயினோர்; கயற்கணாளையும் காமன் அன்னானையும் - பதுமையையிம் சீவகனையும்; மணம் இயற்றினார் - திருமணம் புரிவித்தனர்; மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய - குற்றமற்ற கந்தருவரின் மணத்தைப் போல முன்பே பொருந்திய; இயற்கை அன்பு உடையார் இயைந்தார்கள் - இயற்கைப் புணர்ச்சியால் உள்ள அன்புடையார் தம்மிற் கூடினார்.
|
|
|
(வி - ம்.) கயற்கணாள் : பதுமை. காமனன்னான் : சீவகன். ஏத்தருந்தன்மையார் என்றது தனபதி முதலாயினாரை. மயற்கை - குற்றம். மயற்கை யில்லவர் மன்றல் என்றத குற்றமற்ற தமிழச் சான்றோர் வகுத்த மணம் என்றவாறுமாம். முன்னரே கள்ளப்புணர்ச்சி யுடையாராகலின் இயற்கை யன்புடையார் என்றார்.
|
( 181 ) |
| 1347 |
வாளும் வேலு மலைந்தரி யார்ந்தகண் |
| |
ணாளும் வார்கழன் மைந்தனு மாயிடைத் |
| |
தோளுந் தாளும் பிணைந்துரு வொன்றெய்தி |
| |
நாளு நாகர் நுகர்ச்சி நலத்தரே. |
|
|
(இ - ள்.) வாளும் வேலும் மலைந்து அரியார்ந்த கண்ணாளும் - வாளையும் வேலையும் வென்று செவ்வரி பரந்த கண்ணாளும்; வார்கழல் மைந்தனும் - கட்டப் பெற்ற கழலையுடைய மைந்தனும்; ஆயிடை - பள்ளியிலே; தோளும் தாளும் பிணைந்து - தோளும் தோளும் தாளும் தாளும் பிணைதலின்; உரு ஒன்று எய்தி - ஒரு வடிவைப் பெற்று; நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தர் - நாள்தோறும் நாகர் நுகர்கின்ற நுகர்ச்சியின்பத்தை உடையராயினர்.
|
|
|
(வி - ம்.) மலைந்து - வென்று. அரி - செவ்வரி கருவரிகள். கண்ணாள்; பதுமை. மைந்தன் : சீவகன். ஆயிடை என்றது - பள்ளிக்கட்டிலிடத்தே என்பதுபட நின்றது. தோளோடு தோளும் தாளொடு தாளும் பிணைதலானே என்க. நாகர் - பவணலோகத்தார்.
|
( 182 ) |
| 1348 |
தணிக்குந் தாமரை யாணலந் தன்னையும் |
| |
பிணிக்கும் பீடினி யென்செயும் பேதைதன் |
| |
மணிக்கண் வெம்முலை தாம்பொர வாயவிழ்ந் |
| |
தணிக்கந் தன்னவன் றாரங் குடைந்ததே. |
|