| பதுமையார் இலம்பகம் |
764 |
|
|
கொழுவிய புகை இனிய புகை மெல்லிய புகை எனத் தனித்தனிக் கூட்டுக. கழுமுதல் - பொருந்துதல். காலையும் மாலையும் பிரிதற்குரிய பொழுதுகள். அப்பொழுதும் பிரிவிலராய் என்பது கருத்து. தணப்பு - பிரிவு. எழுமையும் இயைந்து எய்திய அன்பினார் என்றது, அங்ஙனம் பிரிவிலராயதற்குக் குறிப்பேதுவாகும்.
|
( 185 ) |
| 1351 |
நாறி யுஞ்சுவைத் துந்நரம் பின்னிசை |
| |
கூறி யுங்குளிர் நாடக நோக்கியு |
| |
மூறின் வெம்முலை யாலுழப் பட்டுமவ் |
| |
வேற னான்வைகும் வைகலு மென்பவே. |
|
|
(இ - ள்.) நாறியும் - நறுமணப் பொருள்கள் அணிந்தும்; சுவைத்தும் - சுவைப் பொருள்களை உண்டும்; நரம்பு இன் இசை கூறியும் - யாழிசையைக் கொண்டாடியும்; குளிர் நாடகம் நோக்கியும் - இனிய நாடகங்களைப் பார்த்தும் (காமத்தைப் பெருக்கி); ஊறு இன் வெம்முலையால் உழப்பட்டும் - ஊற்றினுக்கினிய முலையால் உழப்பட்டும்; அவ் ஏறு அனான் வைகலும் வைகும் - அந்த ஏறு போன்றவன் நாடோறும் தங்குவான்.
|
|
|
(வி - ம்.) ஐம்பொறி நுகர்ச்சியுங் கூறினார். 'கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் - ஒண்டொடி கண்ணே உள.' என்றார் வள்ளுவர்.
|
( 186 ) |
வேறு
|
|
| 1352 |
விரிகதிர் விளங்கு பன்மீன் |
| |
கதிரொடு மிடைந்து திங்கட் |
| |
டெரிகதிர் திரட்டி வல்லான் |
| |
றெரிந்துகோத் தணிந்த போலுஞ் |
| |
சொரிகதிர் முத்த மின்னுந் |
| |
துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான் |
| |
புரிகதிர்ப் பொன்செய் மாலைப் |
| |
புகைநுதிப் புலவு வேலான். |
|
|
(இ - ள்.) புரிகதிர் பொன் செய்மாலைப் புகைநுதிப் புலவு வேலான் - மிகு கதிரை யுடைய பொன்னொளி தரும் மாலையையுடைய, சின மிகும், நுனியிலே புலாலையுடைய வேலான்; விரி கதிர் விளங்கு பன் மீன் கதிரொடு மிடைந்து - விரிகின்ற கதிர்கள் விளங்கும் பல விண் மீன்களின் கதிர்களுடன் கலக்குமாறு; திங்கள் தெரி கதிர் திரட்டி - திங்களின் விளங்குங் கதிர்கையும் சேர்த்து; வல்லான் தெரிந்து கோத்து அணிந்த போலும் - வல்லவன் ஆராய்ந்து கோத்து அணிந்தன போன்ற; சொரி கதிர் முத்தம் மின்னும் - பெய்யும் ஒளியுடைய முத்து
|
|