பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 765 

மாலை மின்னுகின்ற; துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான் - இரு முலைகளினிடத்தே அமிழ்ந்துவிட்டான்.

 

   (வி - ம்.) மிடைந்து - மிடைய. அணிந்த : பெயர். புரிகதிர் - மிக்க கதிர். கதிர் விளங்கு மீன்களின் கதிரோடே மிடையும்படி திங்களின் கதிரைத் திரட்டி வல்லவன் கோத்தணிந்தவற்றை யொக்கும் கதிரையுடைய முத்தமின்னும் முலையென்க.

( 187 )

வேறு

 
1353 எழின்மாலை யென்னுயிரை
  யான்கண்டே னித்துணையே முலையிற் றாகிக்
குழன்மாலைக் கொம்பாகிக்
  கூரெயிறு நான்போழ்த லஞ்சி யஞ்சி
யுழன்மாலைத் தீங்கிளவி
  யொன்றிரண்டு தான்மிழற்று மொருநாட் காறு
நிழன்மாலை வேனாண நீண்டகண்ணே
  நெய்தோய்ந்த தளிரே மேனி.

   (இ - ள்.) எழில்மாலை என் உயிரை யான் கண்டேன். - அழகினை இயல்பாக வுடைய என் உயிரை யான் கண்டேன்; இத்துணையே - அது இவ் வளவினதே; முலையிற்று ஆகி - முலையினை உடைத்தாய்; நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே - ஒளியையியல்பாக வுடைய வேல் வெள்க, நீண்ட கண்களையும்; நெய் தோய்ந்த தளிர் மேனியே - நெய்ப்பை யுடைய தளிரனைய மேனியையும்; குழல் மாலைக் கொம்பு ஆகி - குழலையும் மாலையையும் உடையதொரு கொம்பாய், கூர் எயிறு நாப் போழ்தல் அஞ்சி அஞ்சி - கூரிய பற்கள் நாவைப் பிளக்குமென்று அஞ்சி அஞ்சி; உழல் மாலைத் தீ கிளவி - உழலும் இயல்புடைய நாவானது இனிய மொழியை; ஒரு நாள் காறும் ஒன்று இரண்டுதான் மிழற்றும் - ஒருநா ளெல்லாம் ஒன்றிரண்டே மொழியும்.

 

   (வி - ம்.) எழில்மாலை என் உயிர் : முதல் சினை வினையொடு முடிந்தது. இது நயப்பு.

 

   என்உயிர் யான் கண்டேன் என்றது ”காணாமரபிற்று உயிர் என மொழிவோர் பொய்ம்மொழிந்தனர் யான் கண்டேன்” என்பது பட நின்றது. இச் செய்யுளொடு,

 
  ”காணா மரபிற் றுயிரென மொழிவோர்  
  நாணிலர் மன்றபொய்ம் மொழிந் தனரே  
  யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே  
  சொல்லு மாடும் மென்மெல இயலும்