| பதுமையார் இலம்பகம் |
767 |
|
|
(இ - ள்.) தேன் அடைந்து இருந்த கண்ணி - வண்டுகள் பொருந்திய கண்ணியினையும்; தௌ் மட்டுத் துவலை மாலை - தெளிந்த தேன் துளியையுடைய மாலையையும்; ஊன் அடைந்திருந்த வேல்கண் - ஊன் தங்கிய வேலனைய கண்களையும்; ஒண்தொடி - ஒளிரும் வளையையும்; கூன் அடைந்திருந்த திங்கள் குளிர்முத்த முலையினாள் - பிறைத் திங்கள் போலக் குளிர்ந்த முத்துமாலையணிந்த முலையையும் உடைய தேசிகப் பாவை; தான் அடைந்திருந்த காவில் - தான் தங்கிய பொழிலிலே; தனிமை தீர்வான் - தனிமையின் வெறுப்பு நீங்க; உருவ வீணை பாடினாள் - அழகிய யாழை யிசைத்துத் தன் குரலையும் இயைத்துப் பாடினாள்.
|
|
|
(வி - ம்.) தேன் - வண்டினம். வீணை : யாழும் மிடறும் கலந்தது.
|
|
|
தேன் - வண்டு. மட்டு - தேன். துவலை - துளி. ஒண்டொடி : தேசிகப் பாவை. உருவவீணை - அழகிய யாழ். திங்கள்போலக் குளிர் முத்த முலையினாள் என்க.
|
( 190 ) |
| 1356 |
வார்தளிர் ததைந்து போது |
| |
மல்கிவண் டுறங்குங் காவிற் |
| |
சீர்கெழு குருசில் புக்கான் |
| |
றேசிகப் பாவை யென்னுங் |
| |
கார்கெழு மின்னு வென்ற |
| |
நுடங்கிடைக் கமழ்தண் கோதை |
| |
யோ்கெழு மயில னாளை |
| |
யிடைவயி னெதிர்ப்பட் டானே |
|
|
(இ - ள்.) வார் தளிர் ததைந்து போது மல்கி வண்டு உறங்கும் காவில் - நீண்ட தளிர்கள் நெருங்கி மலர்கள் நிறைந்து வண்டுகள் துயிலும் பொழிலிலே; சீர்கெழு குருசில் புக்கான் - சிறப்புப் பொருந்திய சீவகன் புகுந்தான்; தேசிகப் பாவையென்னும் - தேசிகப் பாவை யென்று அழைக்கப் பெறும்; கார்கெழு மின்னு வென்ற நுடங்கு இடை - முகிலிற் பொருந்திய மின்னை வென்ற அசையும் இடையையும்; கமழ் தண் கோதை - மணங் கமழும் குளிர்ந்த மாலையையும் உடைய; ஏர் கெழு மயிலனாளை - அழகு பொருந்திய மயில் போன்றவளை; இடைவயின் எதிர்ப்பட்டான் - அவ்விடத்தே கண்டான்.
|
|
|
(வி - ம்.) ததைந்து - நெருங்கி. குருசில் : சீவகன். மின்னு - மின்னல். ஏர்கெழு - அழகு பொருந்திய. மயிலன்ன தேசிகப்பாவையை எதிர்ப்பட்டான் என்பது கருத்து.
|
( 191 ) |